தெலங்கானா மாநில முதலமைச்சரும்,  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. அவர் கடந்த 5 ஆண்டுகளாக நிசாமாபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

தற்போது 17 ஆவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11 ஆம் தேதி முதல் மே 19 தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.  தெலகானாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல்11ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சரும்,  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, நிசாமாபாத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், கவிதாவுக்கு எதிராக 1000 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மஞ்சள், சூலம் ஆகிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்காததால் அதிருப்தி அடைத்த விவசாயிகள் கவிதாவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த திங்களன்று, 43 விவசாயிகள் தங்களது பரிந்துரைப் பத்திரங்களை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு வேட்பு மனு தாக்கல் செய்ய ரூ. 25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். மேலும், 10 வாக்காளர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் மஞ்சள் மற்றும் சூலம் ஆகியவை உற்பத்திக்கு மசோதாவை உறுதி செய்ய தவறிவிட்டதால், தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும்படி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மேலும் சில விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. 

கிராம அபிவிருத்தி குழுக்கள் கிராம மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து, ஆர்மூர், பால்கொன்டா, நிசாமாபாத் கிராமப்புறம், கொருட்லா மற்றும் ஜக்டியல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

மேலும், 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.