சினிமா தியேட்டரில் 100 சதவீதம் பார்வையாளார்கள்.. உத்தரவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

சினிமா திரையரங்கங்கள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன், செயல்பட அனுமதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

100 percent audience in the cinema theater... chief minister m.k. Stalin ordered ..!

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி,
* அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.100 percent audience in the cinema theater... chief minister m.k. Stalin ordered ..!
* திரையரங்குகள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
* மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், கேரளா தவிர்த்து மாநிலங்களுக்கு இடையேயும் சாதாரண மற்றும் குளிர்சாதன பொதுபேருந்து போக்குவரத்து, 100 சதவீதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.100 percent audience in the cinema theater... chief minister m.k. Stalin ordered ..!
* தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.
* ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios