சென்னை மடிப்பாக்கத்தில் 5-ம் வகுப்பு சிறுமியை கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

சென்னை மடிப்பாக்கத்தில் 5-ம் வகுப்பு சிறுமியை கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கொரோனா தொற்று காரணமாக பாலியல் புகார்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சென்னை, உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார். அண்ணா சாலை, எல்.ஐ.சி பின்புறம் உள்ள அம்மன் கோயிலில் அர்ச்சகராக இருந்து வருகிறார்.

அர்ச்சகர் சிவக்குமார் வீட்டில் இருந்தபோது அதே குடியிருப்பில் வசித்து வந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் வீட்டு உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை பற்றி எடுத்து கூறியுள்ளார். பின்னர் வீட்டு உரிமையாளர் அர்ச்சகர் சிவக்குமாரை வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் அர்ச்சகர் சிவக்குமரை தேடிவந்தனர். சிறுமியிடம் தான் தவறுதலாக நடந்து கொண்ட விசயம் அவரது பெற்றோர்க்கு தெரிந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்ட அர்ச்சகர் சிவக்குமார் யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடலாம் என்று எண்ணி அதிகாலை சுமார் 5 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அர்ச்சகர் வீட்டிற்கு வந்ததை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர்கள், அவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய சிவக்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டதும் சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது. பின்னர் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அர்ச்சகர் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.