கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில், ‘’வரும் நிதி ஆண்டில் தமிழக அரசில் வருவாய் 197117 கோடுஇ ரூபாடக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது  வருவாய் பற்றாக்குறை வரும் நிதி ஆண்டில் 14,315 கோடியாக இருக்கும். ஒட்டுமொத்த உற்பத்தியில் சேவை துறையின் பங்குஇ 51,8 சதவீதமாக உள்ளது. 

வரும் நிதி ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து மானியமாக சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். வரும் நிதி ஆண்டில் தமிழக அரசின் செலவு 210420 கோடி ரூபாயாக இருக்கும். சுகாதாரத்துறையில் லட்சியத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த உருவாக்கி செயல்படுத்த 3 ஆண்டுகளுக்கு 2147 கோடி செலவிடப்படும்.  தமிழக அரசுக்கு வரும் நிதி ஆண்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருக்கும். 


மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை பராமரிக்க ரூ.300 கோடி ஒதுக்கப்படும். சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசுக்கு சுமார் 57 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும். சுகாதாரத்துறைக்க்கு 12,563 கோடி ஒதுக்கீடு. தனி நபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் 1,42,267 ரூபாக உயர்ந்துள்ளது. மாநில சமச்சீர் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

நிலத்தடியில் 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் 4 லட்சம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என அவர் அறிவித்தார்.