டி.டி.வி.தினகரன் இந்தத் தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளார். அதன்படியே அவர் சில இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் கூட்டணி சேர்த்து தனித்து களமிறங்கியுள்ளார். 

40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் டி.டி.வி.அணி தேர்தல் களத்தில் படு ஸ்மார்ட்டாக இயங்கி வருகிறது. அதன் படி மொத்தமுள்ள 5.86 கோடி வாக்காளர்களில் 1.50 கோடி வாக்காளர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் டி,டி.வி. கடந்த தேர்தலின் போது திமுக 1 கோடியே 7175 ஆயிரத்து 374 வாக்குகளை பெற்றது அதன் படி திமுகவின் வாக்கு சதவிகிதம் 31.7. அதிமுகவின் வாக்கு சதவிகிதம் 40.8 ஆக உள்ளது. இந்த இரு கட்சிகளை தவிர மற்ற கட்சிகளின் வாக்கு சதவிகிதம் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது. ஆகையால் அமுகவின் வாக்கு சதவிகித்தை திமுக, அதிமுகவுக்கு நிகராக இந்தத் தேர்தலில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார் டி.டி.வி.தினரகரன்.

தினகரனின் இந்தத் திட்டம் சாத்தியமே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தோராயமாக 40 லட்சம் முஸ்லீம் வாக்குளில் 20 லட்சம் வாக்குகள் அமமுகவுக்கு இந்தத் தேர்தலில் கிடைப்பது உறுதி. மீதமுள்ள 20 லட்சம் வாக்குகளை திமுக பெரும்பாலும் ஈர்க்கும். அதேபோல் தென் மாவட்டங்களில் உள்ள 60 லட்சம் முக்குலத்து சமுதாய வாக்குகளில் 40 லட்சம் வாக்குகள் அமமுகவுக்கே கிடைக்கும். திமுகவுக்கு இதில் 10 லட்சம் வாக்குகள் மட்டுமே சென்றடையும். அதேபோல் பெந்தகோஸ் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் அமமுகவுக்கு வாக்களிக்க திரண்டு வருகின்றனர். அதன் படி 10 லட்சம் வாக்குகளை அமமுக மொத்தமாக அள்ளும். 

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால் கூட்டணிக்கட்சிகள் அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்கும் நிலை உருவாகும். 40 தொகுதிகளிலும் அமமுக தனித்துப் போட்டியிடுவதால் அந்த இரு கட்சிகளை விட பல மடங்கு வாக்குகள் அமமுகவுக்கு நேரடியாகக் கிடைக்கும். பிற தொகுதிகளிலும் டி.டி.வி அணிக்கு செல்வாக்கு இருப்பதால் அவர் குறைந்த பட்சம் ஒரு கோடி வாக்குகளை பெறுவார்.

அதிகபட்சமாக 1.5 கோடி வாக்குகளை பெறக்கூடும். இந்த முறை அதிமுக, திமுக வாக்கு சதவிகிதங்கள் குறைந்து அதி அமமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் குறைந்த பட்சம் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை தங்கள் வசப்படும். இதன் மூலம் பெரிய கட்சி என்கிற அந்தஸ்தை அமமுக எட்டும். அடுத்து தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக அமமுக பலம்பெறும் என்கிறார்கள்.

அமமுகவை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை கணிக்க முடியாவிட்டாலும் வாக்கு வங்கியை வலப்படுத்தும். அது அடுத்தடுத்த தேர்தல்களில் முக்கியக் கட்சியாக உருவெடுத்து அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.