Today astrology: ராஜா யோகம் பெறும் 6 ராசி பெண்கள் இவர்கள்தான்... இன்று மகா ராணிகளாக சுற்றி திரிவார்கள்..!
Women's Day 2022: இந்த 6 ராசி பெண்கள் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவார்கள்...இன்று முதல் துணிச்சலுடன் வெற்றி நடை போடுவார்கள்.
இந்த 6 ராசி பெண்கள் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவார்கள்...இன்று முதல் துணிச்சலுடன் வெற்றி நடை போடுவார்கள்.
நம்முடைய வாழ்வில், உயர்ந்த அந்தஸ்தை பெறுவது நம்முடைய கையில் உள்ளது. என்றாலும், நேரம், காலம் கூடி வந்தால் தான் முயற்ச்சி கை கூடும் என்பார்கள். ஒரு சிலர் என்ன தான் முயற்சி செய்தாலும், வெற்றி என்பது அவர்களுக்கு கிட்டவே, கிட்டாது. திருமணம் தொடர்பான காரியங்கள் தள்ளி போகும். சிலர் வெகு விரைவில் தங்கள் கையில் வெற்றியை பெறுவார்கள். இது, ஜோதிட சாஸ்திரத்தின் படி ராசிகளை வைத்தும் கணிக்கப்படுகிறது.
அதன்படி, குறிப்பிட்ட 5 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அதிரடியாக முன்னேறி உயர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இனி அதிர்ஷ்டம் அலையாய் அடிக்கப்போகிறது. இந்த பெண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு அங்கெல்லாம் புகழும் பெருமையுமே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ஐந்து ராசிகள் யார் யார் என்[என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசி பெண்களுக்கு இன்று மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல நினைத்திருந்தால், அந்த கனவும் இந்த வருடம் நிறைவேறும்.மேஷ ராசி பெண்கள் தங்கள் தொழிலில் வரும் ஒவ்வொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்கள். இவர்களை போர் வீராங்கனைகள் என்றும் சொல்லலாம்.
தனுசு:
தனுசு ராசி பெண்களுக்கு இன்று பல சாதனைகளையும் மகிழ்ச்சியையும் தரும். பணியில் இருக்கும் பெண்களும், வியாபாரம் செய்யும் பெண்களும் அதிகப்படியான பண வரவைக் காண்பார்கள். இவர்கள் அற்புதமான தலைமைத்துவ குணம் கொண்டவர்கள். பணியிடம், வியாபாரம் என எதுவாக இருந்தாலும், அனைத்திலும் இவர்கள் வெற்றி காண்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள், சிக்கனம், திட்டமிடல் போன்றவற்றை கடைபிடித்து ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினால், பல மடங்கு அதிக பலன்களைப் பெறலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி பெண்கள் அற்புதமான தலைமைத்துவ குணம் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் நடுநாயகிகளாக இருக்க விரும்புபவர்கள். எப்போதும் வெற்றி இவர்களுக்கு கை கூடும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் சவால் விடுவதில் இந்தப் பெண்கள் பின்வாங்குவதில்லை. இதனுடன், பெரிய பதவிகளின் பொறுப்பையும் இவர்கள் மிக எளிதாகக் கையாள்கிறார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி பெண்களுக்கு, அவர்களின் குறிக்கோள்கள் மிகவும் முக்கியம். மேலும், அவர்கள் வாழ்க்கையில் அதிக பணம் மற்றும் உரிமை இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.
ரிஷபம்:
இந்த ராசிப்பெண்கள் புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மன அழுத்தத்திற்கு மத்தியிலும் பணிகளை வெற்றிகரமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். தாங்கள் செய்யும் அனைத்து பணிகளையும் நன்றாக செய்ய வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள். இவர்களுடைய இந்த குணம் இவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிய அள்ளித் தருகின்றது. எதிலும் முயற்சி செய்து வெற்றி காண்பவர்கள்.வர்கள் திட்டமிட்டு அனைத்தையும் செய்வதில் வல்லவர்கள்.
கன்னி:
கன்னி ராசிப் பெண்கள் இன்று படிப்பில் சிறப்பான வெற்றியைப் பெறவார்கள். வேலைக்காக எங்கு சென்றாலும் இந்த ராசிப் பெண்கள் அதில் வெற்றி பெற்று நல்ல வேலையைப் பெறுவது உறுதி. உங்களுக்கு ஏற்ற, உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கைத் துணையைப் பெறுவீர்கள். பெரிய லட்சியம் மற்றும் சுய ஊக்கம் கொண்டவர்கள்.