எஸ்பி அலுவலகத்தில் கதறும் இளம் ஜோடி..! திருமணமான ஒரே வாரத்தில் இப்படியா..?!  

பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பிற்காக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) 26 வயதான இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை படிப்பை பயின்று வந்த நிலையில் ரேவதிக்கும் ரேவதி அவர் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள மற்றொரு நபர்  ராஜன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இந்த நிகழ்வு இரு வீட்டாருக்கும் தெரிய வரவே எப்படியும் எதிர்ப்பு கிளம்பும் என முன்கூட்டியே வேலூர் எஸ்பி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.