அனைவருக்குமே ஒருகட்டத்தில் அதிக பணக்கஷ்டம் வந்து ஆடி படைத்தது விடும். தொடர்ந்து வீண் செலவுகளால் அவதிப்படுவீர்கள். உதவவும் யாரும் முன் வர மாட்டார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் சில எளிய பரிகார காரியங்களைச் செய்வதன்மூலம் செல்வத்தை தக்கவைக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.  

நிம்மதியையும் செல்வத்தையும் பெருக்கச் செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ

1) சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சைப் பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.

2) வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

3) உப்பு, சர்க்கரை, கடலைப்பருப்பு, சுத்தமான நெய், கோதுமை மாவு, முடிந்த அளவு கோயில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.

4) காய்ச்சாத பசும்பாலை ஆலமரத்துக்கு 7 நாட்கள் ஊற்றி வரவும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பால் ஊற்றினால் சிறப்பு.

5) குளிக்கும்போது கெட்டித் தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும் 7 நாட்கள் மட்டும்.