Asianet News TamilAsianet News Tamil

இந்தியர்கள் சாலை மார்க்கமாகவே பயணம் செய்யக்கூடிய 5 நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் பலரும் விமானங்களில் தான் பயணம் செய்கின்றனர். ஆனால் பல நாடுகளில் விமானங்களுக்குப் பதிலாக சாலைப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்தியாவில் இருந்து சாலை மார்க்கமாக எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

you can travel to these countries by car or bike from india
Author
First Published Nov 21, 2022, 1:26 PM IST

சாலைப் பயணங்கள் வித்தியாசமான மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் தருகின்றன. சாலைப் பயணங்கள் மூலம், சாலைகள் மற்றும் இயற்கையின் அழகை மிக நெருக்கமாகப் பார்க்க முடியும். நீங்கள் விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்தால், நீங்கள் அதிக வசதியைப் பெறலாம், பயணம் எளிதானது என்பது உண்மைதான், ஆனால் சாலைப் பயணங்களால் நீங்கள் பெறும் அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இந்தியாவில், மக்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு சாலைப் பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சாலை மார்க்கமாக செல்லலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியர்கள் சாலைப் பயணம் செல்லக்கூடிய சில நாடுகளைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறேன். 

நேபாளம்

இந்தியாவில் இருந்து சாலைப் பயணம் மூலம் நேபாளம் சென்றால், மறக்க முடியாத அனுபவங்களை நீங்கள் பெறுவீர்கள். இந்த சாலைப் பயணத்தில் பல அழகிய காட்சிகளைக் காணலாம். சாலை வழியாக நேபாளத்திற்குச் செல்லும்போது தனி உரிமம் எதுவும் தேவையில்லை, அதாவது இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் நேபாளத்தில் பயணம் செய்யலாம். மேலும், நேபாளத்துக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. டெல்லியில் இருந்து காத்மாண்டு சென்றால், சோனாலி எல்லையில் இருந்து நேபாளத்திற்குள் நுழைய வேண்டும். டெல்லியில் இருந்து 1079 கி.மீ. பயணம் செய்தால், சாலை வழியாக நேபாளத்தை அடைந்துவிடலாம்.

தாய்லாந்து

நீங்கள் தாய்லாந்து செல்ல திட்டமிட்டால், விமானத்தில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்லுங்கள். ரோடு ட்ரிப் மூலம் தாய்லாந்து சென்றால், அந்நாட்டின் பண்பாட்டு கூறுகளை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்க்க முடியும். மேலும் அங்கு பல அழகான கடற்கரைகள், தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் உள்ளன. அவற்றை சாலை மார்க்கமாக செல்லும் போது காணலாம். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், தாய்லாந்தில் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். இங்கு செல்ல விசா மற்றும் சிறப்பு அனுமதி வேண்டும். டெல்லியிலிருந்து தாய்லாந்து வரை சாலை வழியாக 4,138 கிமீ தொலைவில் உள்ளது, அங்கு சென்றடைய 75 மணிநேரம் ஆகும்.

பூடான்

இந்திய மக்கள் மிகவும் எளிதாக பூடானுக்கு சென்று திரும்பலாம். அந்த நாட்டுக்கு நாம் சாலை மார்க்கமாக செல்கிறோம் என்றால் எந்த பிரச்னையும் கிடையாது. இந்தியர்கள் இங்கு வருவதற்கு பாஸ்போர்ட் அல்லது விசா எதுவும் தேவையில்லை. நீங்கள் இந்தியாவிலிருந்து பூட்டானுக்கு சாலைப் பயணம் மூலம் செல்ல விரும்பினால், பூடான் எல்லைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் வாகன எண்ணைப் பதிவு செய்ய மறக்காதீர்கள். டெல்லியிலிருந்து பூடானுக்கு சாலை வழியாக 1,915 கிமீ தொலைவில் உள்ளது, இங்கு சென்றடைய 37 மணிநேரம் ஆகும்.

தேநீர் அருந்தியதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? அப்போது உங்களுக்காக தான் இந்த பதிவு..!!

மலேசியா 

இந்தியாவிலிருந்து சாலைப் பயணத்தின் மூலம் அடையக்கூடிய நாடுகளில் ஒன்று தான் மலேசியா. டெல்லியிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்ல மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளைக் கடந்து செல்ல வேண்டும். பயணத்தின் போது ஏதேனும் சிக்கலைத் தவிர்க்க விரும்பினால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் விசாவை உங்களுடன் வைத்திருக்கவும். டெல்லியில் இருந்து மலேசியாவிற்கு சாலை வழியாக 5,536.6 கிமீ தூரம் உள்ளது, இங்கு சென்றடைய 95 மணிநேரம் ஆகும்.

துருக்கி

நீங்கள் வாகனம் ஓட்ட விரும்பினால் மற்றும் நீண்ட தூரம் செல்ல விரும்பினால், துருக்கியை விட உங்களுக்கு சிறந்த இடம் எதுவுமில்லை. டெல்லியில் இருந்து துருக்கி வரையிலான முழு பயணத்திலும், நீங்கள் பல அழகான விஷயங்களை அனுபவிக்க முடியும். டெல்லி - லாசா (திபெத்) - சீனா - கிர்கிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் - துர்க்மெனிஸ்தான் - ஈரான் - துருக்கி. துருக்கியை அடைந்த பிறகு, பல அழகிய காட்சிகளை இங்கு காணலாம். நீங்கள் மிகவும் ரசிக்கக்கூடிய அழகான கடற்கரைகளும் உள்ளன. டெல்லியில் இருந்து 3,993 கி.மீ பயணம் செய்து துருக்கியை அடையலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios