கொரோனாவிற்கு யோகா..! யோகி ஆதித்யநாத் பரபரப்பு..! 

தற்போது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த யோகா செய்தாலே போதும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்திய பாரம்பரியத்தை நாம் அழகாக புரிந்து வைத்துள்ளோம். யோகா மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் உலக மக்கள் ஆரோக்கியத்தை தேடி அலைகின்றனர். மனநிம்மதி இல்லாமல் துன்புறுத்துகின்றனர்.

எனவே யோகாவின் பல கோடி நன்மைகளை உணர்ந்து தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் பொதுவாகவே மாரடைப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்

அவ்வளவு ஏன் தற்போது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காதவாறு பாதுகாக்க தொடர்ந்து யோகா செய்து வந்தாலே போதுமானது என தெரிவித்து இருந்தார்.

தற்போது வரை கொரோனா வைரசால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சீனாவில் மட்டும் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஒரு சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதால் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கிலும் பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது.