Otherwise we can not even imagine how this world would be

உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் கொண்டவர்கள் மகளிர். பெண்கள் இல்லையென்றால் இந்த உலகம் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க கூட முடியாது . அந்த அளவுக்கு பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் கூற முடியாது .பெண்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான ஒரு தினத்தை “மகளிர் தினமாக “ ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சர்வதேச மகளிர் தினமாக இந்நாள் அறிவிக்கபட்டு இந்தாண்டோடு, 1௦6 வருடங்கள் ஆகிறது. அதாவது 1911 ஆம் ஆண்டு தான் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது .இதன் பின்னர் தான் மகளிர்கள் தங்கள் உரிமைக்காக போர்க்கொடி எடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள், சம உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை போன்றவற்றை பெற போராட தொடங்கினர் . அன்று ஆரம்பித்த போராட்டத்தின் விளைவாக ,உதிர்ந்தது தான் 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 “ மகளிர் தினமாக “ கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டில் ஒரு நாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடலாம் .ஆனால் ஒவ்வொரு நாளும் மகளிருக்கான முக்கியத்துவம் கொடுத்தாலே போதும். ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான்