World tuberculosis day 2022: உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காசநோய் என்றால் என்ன?
உயிர்கொல்லி நோயான காசநோய் ஆண்டுதோறும் பல மில்லியன் மக்களை கொன்று குவித்து வருகிறது. குறிப்பாக, நுரையீரலிலும், தொண்டையினை தாக்கும், இந்த நோயின் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும் .ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, எச்சில் மூலமாக காற்றில் மூலமாக பாதிக்கச் செய்யும். இது ஒரு தொற்று நோய் என்பதால், ஆரம்ப நிலையில் இந்த நோய்க்கு நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும்.

காச நோயின் அறிகுறிகள் அறிக:
1. அதிகப்படியான இருமல், அதிக எடை குறைவு, பசியின்மை, இரவில் வியர்வை, மிக அதிக சோர்வு, சக்தியின்மை போன்றவை காச நோயின் அறிகுறிகள் ஆகும்.
2. எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக காச நோய்க்கு எளிதில் பாதிக்கப்படுவர்.
3. புற்று நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பு ஏற்படும்.
4. சுகாதாரத்தினை மேம்படுத்துவது மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.

5. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது போன்றவை சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
காசநோய் விழிப்புணர்வு தினம் வரலாறு:
19 ம் நூற்றாண்டில் காசநோய், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. இதனால் உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்தனர். இதையடுத்து, கடந்த 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் 24 ம் தேதி டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை கண்டறிந்து ,அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார்.

காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு சிகிக்சை அளிக்க உதவியது. இதையடுத்து, 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
