திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கை கால்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் முன்மாதிரி பள்ளி கட்டிடம் திறப்பு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் பெருமுயற்சியால் ரூபாய் 15 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் வகுப்பறைகள், தொடுதிரை வகுப்பறைகள், தொலைக்காட்சி அறை, இன்டர்நெட் வசதி மேம்படுத்தப்பட்ட கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, படிப்பதற்கு ஏற்ற புத்தம், புதியதாக உணவு அருந்தும் அறை, காய்கறி தோட்டம், துள்ளித் துள்ளி விளையாட ஊஞ்சல் என உலகத் தரத்திற்கு ஒரு அரசுப் பள்ளி திருவண்ணாமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. 

இந்த பள்ளியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார். மேலும் இத்தகு சிறப்பு வாய்ந்த அரசு பள்ளியை காண திருவண்ணாமலை மக்கள் ஆர்வமாக வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.


தனியார் பள்ளியில் படித்தால் தான் சரி என்ற அளவிற்கு இருந்த காலகட்டம் மாறி தற்போது அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு சீட் கிடைப்பதே பெரும்பாடு ஆகிவிடும் போலிருக்கு வரும் காலங்களில்... இதற்கெல்லாம் உதாரணமாக...முதல் முறையாக  உலக தரத்தில் உருவாகி உள்ள வேங்கைகால் புதூர் அரசு தொடக்கப்பள்ளியை எடுத்துக்காட்டாக கூறலாம். மேலும், மற்ற தனியார் பள்ளிகளில் கூட இல்லாத அனைத்து வசதிகளும் அரசு பள்ளியில் உள்ளதை நினைத்து, சாதாரண நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.