Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் உடலை தொடுவது மட்டும் அல்ல! இவைகளும் பாலியல் பலாத்காரங்கள் தான்! அதிர வைக்கும் தகவல்!

கேவலமான வார்த்தை அல்லது உயர்ந்த தொனி பேச்சு. ஒருவர் நம்மை அச்சுறுத்த அல்லது தாழ்வாக உணரச் செய்ய இதுபோன்ற கீழ்த்தரமான வழிகளைப் பயன்படுத்தலாம். துஷ்பிரயோகம் என உடல்ரீதியான தொந்தரவுகளைப் பற்றியே கூறப்பட்டாலும் சில நேரங்களில் வாய்மொழி துஷ்பிரயோகம் கூட உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை.

Women are not just touching the body  are also rape, Stunning information
Author
Chennai, First Published Oct 29, 2018, 12:50 PM IST

கேவலமான வார்த்தை அல்லது உயர்ந்த தொனி பேச்சு. ஒருவர் நம்மை அச்சுறுத்த அல்லது தாழ்வாக உணரச் செய்ய இதுபோன்ற கீழ்த்தரமான வழிகளைப் பயன்படுத்தலாம். துஷ்பிரயோகம் என உடல்ரீதியான தொந்தரவுகளைப் பற்றியே கூறப்பட்டாலும் சில நேரங்களில் வாய்மொழி துஷ்பிரயோகம் கூட உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. இந்தவித தாக்குதல் வெளிப்படையாகத் தெரியும் தன்மை இல்லாததன் காரணமாக, ஒருவர் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அதை எளிதில் உணர முடியாது. 

Women are not just touching the body  are also rape, Stunning information

வாய்மொழி துஷ்பிரயோகம் என்பது கத்துதல் திட்டுதல் மட்டுமல்ல. வாய்மொழி துஷ்பிரயோகம் செய்பவர் பாதிக்கப்படுபவர்களை குழப்பி அவர்களுக்கு தங்கள் மீதே சந்தேகம் ஏற்படுத்தும் முறையை கடைபிடிக்கிறார்கள். பாதிப்பை உருவாக்குபவர் ஒரு மென்மையான குரல் மற்றும் அன்பான தொனியைக் கூட பயன்படுத்தலாம். 

குற்றம்சாட்டுதல்

கிண்டல் செய்பவர்கள் எதிராளியின் புத்திசாலித்தனம், அழகு மற்றும் சிறப்புகளை பேசுவதில்லை புண்படுத்துவது, கேலிக்கூத்து அல்லது கொடூரமான ஒரு தொனியைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர்.

Women are not just touching the body  are also rape, Stunning information

ஒப்பீட்டுக் குற்றங்களில் உங்களை அகப்படுத்தும் போது சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக்கூட உங்களை குற்றவாளியாக உணரச்செய்வது துஷ்பிரயோகிகளின் வழக்கம்.

மிரண்டு போகச் செய்வது

கீழ்த்தரமான நகைச்சுவை மற்றும் தவறான கருத்துகளில் தொடங்கி சுய மரியாதையை முற்றிலும் பாதிக்கும் பொருத்தமற்ற மொழியில் அமையலாம். நாளுக்கு நாள் வலுக்கும் இந்த அச்சுறுத்தல் நீங்கள் விரும்பாத அல்லது செய்யக்கூடாத ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிடும்

குற்றம் சொல்லுதல்

பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையற்ற தன்மையால் ஏற்படும் வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றொரு வகை. நம்பிக்கையின்மை சுயமரியாதைக் குறைவுடன் தொடர்புடையது, இது உங்கள் அனைத்து செயல்கள், இயக்கங்களை பாதிக்கிறது

 

எதிர்மறை மாற்றங்கள்:

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில வகை வாய்மொழி துஷ்பிரயோகங்கள் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுத்தும் தொடர்ச்சியான விளைவுகளை சிறிது கவனம் செலுத்தினால் உணர்ந்துவிட முடியும்.

Women are not just touching the body  are also rape, Stunning information

தாங்கள் பார்க்கும் நடத்தைகளிலிருந்தும் மனிதர்கள் கற்றுக் கொள்கிறார்கள். துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் துரதிருஷ்டவசமாக துஷ்பிரயோக குற்றத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாத பெற்றோரின் சூழலில் வளர்ந்து ஒரு குழந்தை, வயது வந்தவுடன் வாய்மொழி துஷ்பிரயோகம் செய்கிறார். 

நீங்கள் வாய்மொழி துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. உங்கள் நலன், நீங்கள் வாழும் நிலைக்கு நீங்கள் கொடுக்கும் கவனத்தை சார்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios