கர்ப்பம் என்பது தவம் என்றும், பிரசவம் என்பது மறு பிறப்பு என்றும் கூறப்படுகிறது தவத்தில் பசி, பலவீனத்தைத் தவிர எதுவும் இல்லை ஆனால், கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிறு பிடிப்பது என பல கட்டங்களை கடந்து வர வேண்டும்.

பிரசவம் - மறு பிறப்பு 

பெண்களின் உடல் சதை கிழிந்து, எலும்புகள் பிளந்து தனக்குள் வளரும் உயிரை மண்ணுக்கு கொண்டு வருகின்றனர். 9 மாதங்கள் வலியை பொறுத்துக்கொண்ட் பெண்கள் பிரசவ வலியில் கதற வேண்டியிருக்கிறது. அப்போது ஆதரவாக இருக்க வேண்டியது கணவர்களின் கடமை.

முதல் கட்ட வலியின்போது பெண்கள் சற்று தைரியமாக தான் இருப்பார்கள். அந்த நேரத்தில் தைரியத்தை மேம்படுத்தும் பயப்படாதே, எதுவும் ஆகாது என்பது போன்ற கணவரின் ஆறுதல் மொழிகள் அவர்களுக்கு வலிமையை அளிக்கும்.

வலியின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் போது மனைவியின் கண்களை மூடிக்கொள்ளச்செய்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டுக் கொண்டும், தலையைக் கோதி விட்டுக்கொண்டும், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், யாரைப் போல இருக்கும்  என கேள்விகளை எழுப்பி பிரசவ வலி மறந்துபோகும் அளவுக்கு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

உச்ச கட்ட வலியின் போது மனைவிக்கு தைரியம் ஊட்டும் வகையில் குழந்தையின் தலை வெளி வந்துவிட்டது, இன்னும் இரண்டு - மூன்று நிமிடங்கள் தான் எல்லாம் முடிந்து விடும் எனக்கூறி தைரியப்ப்டுத்தலாம். உன்னுடன் நான் இருக்கிறேன், எதுவும் ஆகாது என்ற தைரியத்தை கணவன்மார்கள் கொடுத்தால், பெண்கள் ஒரு பிரசவம் என்ன? ஒன்பது பிரசவத்திற்கான வலியை கூட ஒரே நேரத்தில் தாங்குவர்.