திருமணத்துக்குப் பின் கணவனிடம் பகிர்ந்துகொள்ள மனைவிகள் அஞ்சுவதில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று கணவன் மனைவி உறவு சார்ந்தது. மற்றொன்று பிற உறவுகள் சார்ந்தது

சண்டை

கணவரின் சகோதரிகள் அல்லது கணவரின் சகோதரர்களின் மனைவிகளுக்கு புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுட பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். இதுவரை தங்களுக்கு மட்டும் கிடைத்த மரியாதையை இனி வேறொருவர் அபகரித்துக் கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. இது குறித்து கணவனிடம் கூறினால், அவர் தன்னை எப்படி எடுத்துக் கொள்வார். புதிதாக வந்த தன்னை சந்தேகப்படுவாரோ என அச்சம் கொள்கின்றனர். 

சேமிப்பு

பெண்கள் அதிக பணம் சேமித்து வைத்தாலும், அதுகுறித்து கணவனிடம் கூற மாட்டார்கள். அவசர தேவை என்று வரும் போது நிச்சயம் அதை கொடுத்து உதவுவார்கள் என்றாலும் தெரியாமல் சேமித்து வைப்பதை நினைத்து அச்சம் கொள்வது உண்டாம்.

முன்னாள்

பலரது வாழ்வில் ஒரு முன்னாள் இருக்கலாம். சந்தர்ப்ப சூழல் காரணமாக அந்த "முன்னாளை" காண வேண்டிய நிலை ஏற்படலாம். கணவனுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், தெரியாமல் போனாலும் அந்த "முன்னாளை" பார்த்தால், பேசினால் கணவன்  எப்படி எடுத்துக்கொள்வார் என்ற அச்சம் பெண்களுக்கு இருக்கிறது.

செக்ஸ்

செக்ஸ் என்பது ஒருவரின் விருப்பதின் பால் மட்டும் நடக்க வேண்டியது அல்ல. இருவரும் ஒருமனதாக சேர வேண்டிய நிலை. கணவன் வேண்டும் போது மனைவியின் சூழல், மனநிலை ஒத்துவராவிட்டால் நிச்சயமாக மறுக்கலாம். கணவன் செக்ஸ் வேண்டி, தான் மறுத்தால் கோபித்துக்கொள்ளக்கூடும் என பெண்கள் வேண்டா வெறுப்பாக செக்ஸில் ஈடுபடுகிறார்கள். மனவிருப்பமின்றி உடலுறவில் ஈடுபடுவதால் இல்லறத்தில் மனக்கசப்பு தான் ஏற்படுகிறது. இதை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.

பணவுதவி

திருமணத்திற்கு பிறகு தங்கள் பெற்றோருக்கு பணவுதவி செய்வதை கணவன் ஏற்பாரா? மாட்டாரா? என்ற அச்சம் பெண்களுக்கு உள்ளது. படித்தவர்கள் கூட பெண்கள் அவர்கள் பெற்றோருக்கு பணவுதவி செய்வதை தடுப்பது நடக்கத்தான் செய்கிறது.