நாம் அழுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைக் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.

சிரிப்பது குறித்து பல நன்மைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அழுவதன் நன்மைகளை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த உண்மை தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக அழுதுவிடுவீர்கள். ஏனென்றால் அழுவது நல்லது. அழுகை உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். அழும்போது நாம் சிந்தும் கண்ணீரில் 3 வகை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

கண்களை பாதுகாக்கும் கண்ணீர்: 

இமைக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருவதையும் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது பாசல் டியர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கண்கள் வறண்டு போகாமல் இருக்க உதவும். 

பிரதிபலிப்பு கண்ணீர்: 

சில நேரங்களில் சாலையில் செல்லும் போது தூசி மற்றும் புகையால் கண்களில் கண்ணீர் வரும். இந்த வகையான கண்ணீர் உங்கள் கண்களை சுத்தப்படுத்தும் ரிஃப்ளெக்ஸ் டியர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

உணர்ச்சியால் வரும் கண்ணீர்:

சில நேரங்களில் நாம் உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்படுவோம். உணர்ச்சிகள் நம் மீது ஆதிக்கம் செலுத்தும். இதனால் கண்களில் இருந்து கண்ணீர் வரும். இந்த வகையான கண்ணீர் உங்களுக்கு மன ஆறுதலைத் தரும் உணர்ச்சி கண்ணீர் என்று அழைக்கப்படுகிறது.

அழுவதால் என்ன பயன்?

நீங்கள் அழுவதால், உங்கள் உணர்ச்சி கட்டுக்குள் இருக்கும். அதனால் மன அழுத்தம் குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் அழும்போது, ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியாகும். இதன் காரணமாக, உடல் மற்றும் உணர்ச்சி வலி குறைகிறது. கண்ணீரில் ஐசோசைம் என்ற திரவம் உள்ளது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றுவதன் மூலம் கண்களை சுத்தம் செய்கிறது. பாசல் டியர்ஸ் காரணமாக, கண்களின் சளி வறண்டு போகாது. உங்கள் கண்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும். அழுவதால் மற்ற உணர்வுகளுக்கு ஆதரவு கிடைக்கும். இனிமேல் அழுகை வரும்போதெல்லாம் அதை நிறுத்தாதீர்கள். ஏனென்றால் அழுவது நல்லது.