இடியோடு மழை பெய்யும் போது குளிப்பது ஆபத்து என்று சொல்லப்படுகின்றது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Why Should You Never Shower During a Thunderstorm : பொதுவாகவே இடி மற்றும் மின்னல் சமயத்தில் திறந்தவெளி அல்லது உயரமான மரங்களுக்கு அருகில் செல்லக்கூடாது என்று கூறுவார்கள். அதுபோல இடியோடு மழை பெய்யும் போது குளிக்கு கூடாது. அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது. இது குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில், "பொதுவாக பிளம்பிங் அமைப்புகள் மற்றும் தண்ணீர் மின்சாரத்தை கடத்தும். இடியோடு மழை பெய்யும் போது குளிப்பது பாத்திரங்கள் கழுவுவது குழாய்களை தொடுவது போன்றவை ஆபத்து" என்று கூறுகின்றனர்.

அறிவியல் காரணம்:

பொதுவாகவே மின்னல் உயரமான, அதுவும் ஒரு கட்டிடத்தை தாக்கும் போது அந்த கட்டிடத்தில் இருக்கும் பிளம்பிங், வயரிங் வழியாக பயணிக்கும். மெட்டல் குழாய்களும் அவற்றுக்குள் இருக்கும். தண்ணீரும் மின்சாரத்தை கடத்தும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கிறது.

ஆதாவது, இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது அது உங்களது வீட்டில் அருகில் உள்கட்ட அமைப்பை தாக்கினால் உருவாகும் மின்னலானது குழாய் வழியாக பயணித்து நீங்கள் குளிக்கும் போது உங்களை மின்சாரம் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளன. ஏற்கனவே சொன்னபடி, மின்னலானது குழாய் வழியாகவே பயணிக்கும். ஆகவே இடியோடு மழை பெய்யும் போது நீங்கள் குளிப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்ற விஷயங்களை செய்வது தவிர்ப்பது நல்லது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது.

பிளாஸ்டிக் குழாய் ஆபத்து இல்லையா?

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பிளாஸ்டிக் குழாயில் மின்னல், இடி தாக்கம் சிறிது குறைவாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக அது ஒரு நீர் நிலையான கடத்தியாக இருக்கும் போது ஆபத்து முற்றிலும் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கடுமையான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது. அவை..

  • பாத்ரூமில் குளிப்பதை அல்லது கிச்சனில் பாத்திரங்களை கழுவுவதை தவிர்ப்பது நல்லது.
  • வயர் போன்ற எலக்ட்ரானிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • ஜன்னல் கதவு மற்றும் கான்கிரீட் சுவர்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
  • வாஷிங் மெஷின், டிஷ்வாஷர் போன்றவற்றை தொடுவதை அல்லது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் குளிக்க வேண்டும் அல்லது பாத்திரங்களை கழுவ வேண்டும் என்றால் இடை முழுமையாக நின்ற பிறகு 30 நிமிடங்கள் கழித்து உங்களது வேலைகளை செய்யலாம்.