Asianet News TamilAsianet News Tamil

பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது என்று சொல்லுகிறார்களே.. அது ஏன் தெரியுமா??

நிறைய வீடுகளின் குளியலறையில் பூரனின் தொல்லை அடிக்கடி இருக்கும். இப்படி பூரான் வீட்டிற்கு வருவது நன்மையா? அல்லது தீமையா? மேலும் பூரான் வீட்டிற்கு வந்தால், அதனை அடித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே அது ஏன் என்பதை குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்..

why should you never kill a centipedes in your house know behind the reason here in tamil mks
Author
First Published Nov 16, 2023, 3:39 PM IST | Last Updated Nov 16, 2023, 3:41 PM IST

நம் வீட்டிற்கு நம்மை அடிக்கடி தொல்லைப்படுத்தும் சில பூச்சிகள் வரும். அவற்றில் ஒன்று விஷ பூச்சியான பூரான். இது பார்ப்பதற்கு தட்டையாகவும், பல கால்களுடனும் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் பூராணில் சிறிதளவு மட்டுமே விஷத்தன்மை இருப்பதால், மனிதர்களை இது கடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படாது. மேலும் இது கடித்த இடம் சிவந்து போகும், வலி மற்றும் எரிச்சல் ஆகியவை மட்டுமே ஏற்படும். ஆனால் இந்தமாதிரியான அறிகுறிகள் சிலருக்கு மட்டுமே வரும். இன்னும் சிலருக்கோ உடலளவில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படும். எனவே, இப்படிப்பட்டவர்கள் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது. 

வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்த இடம்:
அதுபோல், ஒருவர் வீட்டில் பூரான் வந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் ஏராளமான கஷ்டங்களை சந்திப்பார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு இடம் வீடு ஆகும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களின் பொறுப்பு என்று கூட சொல்லலாம். இந்நிலையில் உங்கள் வீட்டில் விஷ ஜந்துக்கள் வருகிறது என்றால், உங்கள் வீடு சுத்தமாக இல்லை என்று தான் அர்த்தம்..

அதுமட்டுமின்றி, நிறைய வீடுகளின் குளியலறையில் பூரனின் தொல்லை அடிக்கடி இருக்கும். இப்படி பூரான் வீட்டிற்கு வருவது நன்மையா? அல்லது தீமையா? மேலும் பூரான் வீட்டிற்கு வந்தால், அதனை அடித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே அது ஏன் என்பதை குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்..

வீட்டிற்கு பூரான் வருவது ஏன்?
பொதுவாகவே, நம் வீட்டிற்கு பூரான் வருவது முதற்காரணம் என்னவென்றால், நம் வீட்டை சுற்றி இருக்கும் சூழ்நிலையாகும். எப்படியேனில், ஒருவேளை நம் வீட்டை சுற்றி சேரும், சகதியுமாக இருந்தால் கண்டிப்பாக பூரான் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. ஏனெனில், அசுத்தம் நிறைந்த இடத்தில் தான் அவை அதிகளவில்  வசிக்குமாம். 

ஒருவேளை உங்கள் வீட்டை சுற்றி சேரும் சகதியும் இல்லை, ஆனால்  வீட்டிற்கு பூரான் வருகிறது என்றால் அது உங்களுக்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி நீங்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைக்கவில்லை என்பதையும் குறிக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் வீட்டின் கழிவறை, குளியலறை, வாஷ்பேஷன், சிங் போன்ற இடங்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு  சுத்தம் செய்யுங்கள் மற்றும் அங்கு ப்ளீச்சிங் பவுடரை கொட்டிக் கொண்டே இருக்கவும். இப்படி நீங்கள் செய்தால் உங்கள் வீட்டிற்கு பூரான், சிறு பாம்பு, தேள், போன்ற விஷ ஜந்துக்கள் வரவே வராது...

பூரானை ஏன் கொல்லக்கூடாது?
நம் வீடு சுத்தமாக இல்லையென்றால் பூரான் வீட்டிற்கு வரும். எனவேதான், நம் வீட்டை சுத்தப்படுத்த சொல்லவே அது நம்மை எச்சரிக்கிறது. அதுமட்டுமின்றி, விஷப் பூச்சிகள் தான் பூரானின் உணவு.. எங்கு நிறைய விஷப் பூச்சிகள் வாழ்கிறதோ அங்கு பூரானின் நடமாட்டம் இருக்கும். ஒருவேளை, நாம் பூரானை  கொன்று விட்டால் விஷத்தன்மை உடைய பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் பூரானை அடிக்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள். இதுதான் பூரானை கொல்லக்கூடாது என்பதற்கான உண்மை காரணம் ஆகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios