ஆண்கள் எதற்கு முடியை ட்ரிம் செய்ய வேண்டும் தெரியுமா....? தெரியுமா இந்த ரகசியம் உங்களுக்கு...?

பொதுவாகவே ரோமங்கள் உடலில் இருப்பது என்பது நல்லது தான்...  இயற்கையாக வளரும் இந்த ரோமங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வயது வந்தவுடன் ரோமங்களின் வளர்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

அதில் பெண்கள் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களுக்கே உண்டான மென்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அழகு நிலையம் சென்றோ அல்லது தனக்கு தானேவோ   முயன்று ரோமங்களை அகற்றிக்கொள்வார்கள்...

ஆனால் ஆண்கள் ஷேவ் செய்துக்கொள்வது வழக்கம்....ஆனால் ஷேவ் செய்வதை விட ட்ரிம் செய்துக்கொள்வது எந்த அளவிற்கு நல்லது என்பதையும் அறிவியல் பூர்வமாக உள்ள உண்மையையும் இங்கே பார்க்கலாம் வாங்க...

வலி இல்லை...

ஆண்களை பெண்களுடன் ஒப்பிடும் போது, ஆண்களுக்கு தான் ரோமங்கள் அடர்த்தியாகவும், வலிமை மிகுந்ததாகவும் இருக்கும். இதனை ஷார்ப் ப்ளேடு கொண்டு ஷேவ் செய்யும் போது பயங்கர வலி எடுக்கும்.... இதனை தடுக்க அழகாக ட்ரிம் செய்துக் கொள்வதே நல்லது

பக்க விளைவுகள் இல்லவே இல்லை....

ஆண்களின் உடலில் நேரடியாக அந்த ஷார்ப் ப்ளேடு கொண்டு ஷேவ் செய்யும் போது தேவை இல்லாமல் ரெட்னஸ் தோன்றுவது, எரிச்சல், நமிச்சல், தோல் அரிப்பு, அலர்ஜிக் ரியாக்ஷன் உள்ளிட்ட பல பிரச்சனை எழும்...இதனை சரி செய்ய ட்ரிம் செய்துக் கொள்வதே நல்லது

தோலில் காயம் அல்லது பரு உள்ள போது....

முகத்தில் முகப்பரு உள்ளபோதோ அல்லது உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் எதாவது காயம் ஏற்பட்டு உள்ளபோதோ இது போன்று ஷேவ் செய்தால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

எனவே இது போன்ற சமயத்தில் ட்ரிம் செய்துக்கொள்வது ஆக சிறந்தது

முடியின் வேர்ப்பகுதியை பாதிக்காத ட்ரிம்

வேக்சிங் அல்லது ஷேவ் செய்து ரோமங்களை அகற்றும் போது,  முடியின் வேர்ப்பகுதி வரை பாதிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் ட்ரிம் செய்துக்கொண்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் முடியும் ஆரோக்கியமாக வளரும்

பக்க விளைவுகளும் இல்லை...

ஷேவ் செய்த உடன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு நாரமளாக முடி வளர தொடங்கிப் இருப்பதை நன்கு உணர முடியும்.. அப்போது நமிச்சல், எரிச்சல், வீக்கம், அலர்ஜி, இது போன்ற எதாவது ஒன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்தில் கருமை நிறமாக கூட மாறக்கூடிய நிலை ஏற்படும்.

இதை தவிர்க்கும் பொருட்டு, ட்ரிம் செய்துக்கொள்வது நல்லது.