Asianet News TamilAsianet News Tamil

dogs: நாய் ஏன் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிக்கிறது? சமீபத்திய ஆய்வில் வெளிவந்த உண்மைகள்..

Dogs pee on poles or car tyres: கார் டயரில் அல்லது கம்பங்ஙகளில் நாய் ஏன் எப்போதும் சிறுநீர் கழிக்கிறது? என்பது தொடர்பான நாய் நிபுணர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ளது. 

Why do dogs always pee on poles or car tyres
Author
Chennai Central, First Published May 26, 2022, 4:28 PM IST

நம் அன்றாட வாழ்க்கையில், சில வேடிக்கையாக, விசித்திரமான பல்வேறு விஷயங்களை பார்த்து கடந்து சொல்வோம். ஆனால், அவற்றின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள பெரிய அளவில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம். 

அப்படியான ஒரு விஷயம் தான், நாய்கள் டயர்கள் அல்லது கம்பங்களில் சிறுநீர் கழிப்பது. இவை நாம் அனைவரும் நம்முடைய வீடுகளில் அல்லது வெளியில் செல்லும் போது அடிக்கடி பார்த்திருப்போம். பிறகு அவற்றை கடந்து சென்று விடுவோம், இருப்பினும் அவற்றை கடந்து செல்வதை பற்றி எந்த முயற்ச்சியும் எடுக்க மாட்டோம்.

Why do dogs always pee on poles or car tyres

நீங்கள் என்றாவது யோசித்து பார்த்தது உண்டா..? நாய்கள் ஏன் சிறுநீர் கழிக்க பெரும்பாலும் கார் டயர் அல்லது கம்பங்களை தேர்தெடுகிறது என்று..? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன...? இல்லை நாய்களின் இயல்பான குணங்களிலில் ஒன்றா..? என்று தற்போது இது தொடர்பான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

இது தொடர்பாக  நாய் நிபுணர்கள் நடத்திய ஆய்வின் முடிவில், கிடைத்த மூன்று முக்கிய காரணங்கள்  இதோ...

1. ஒரு நாய் ஒரு கம்பத்திலோ அல்லது டயரிலோ சிறுநீர் கழிக்கும் போது, ​​மற்ற நாய்களும் அந்த கம்பம் தூண் அல்லது அந்த டயரில் உள்ள சிறுநீர் வாசனையை கண்டறிந்து அந்த இடத்தில் தன் முத்திரை பதிக்கும்.மேலும் ரப்பர் டயரில் நாயின் சிறுநீர் வாசனை நீண்ட நேரம் இருக்கும். ஆனால், நாய்கள் தரையில் சிறுநீர் கழித்தால், அவற்றின் வாசனை குறுகிய காலத்தில் காணமால் போகும்.

2. பூனை, முயல், ஜாகர் அல்லது பைக் என நகரும் எதையும் துரத்துவது நாயின் இயற்கையான உள்ளுணர்வாக இருப்பதால், காரைத் துரத்துவது நாய்க்கு முற்றிலும் இயற்கையான ஒன்றாகும். ஆனால், நாய்கள் ரப்பர் டயர்களில் சிறுநீர் கழிப்பதற்குகாரணம் உள்ளது. பொதுவாக, நாய்களுக்கு ரப்பர் வாசனை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான், டயர் வாசனையால் கவரப்பட்டு, அதன் அருகே சென்று சிறுநீர் கழித்த பின் திரும்புகின்றன. 

Why do dogs always pee on poles or car tyres

3. மேலும் நாய்கள் கிடைமட்ட பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை விட செங்குத்து பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை அதிகம் விரும்புகின்றன. ஏனெனில், டயர் மற்றும் கம்பத்தின் கீழ் பகுதி நாயின் மூக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். எனவே, அவை மற்ற நாய்களுக்கும் மூக்கு எட்டும் மட்டத்தில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல இவை காரணமாகும் என்பதே, ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ள உண்மை ஆகும்.

 மேலும் படிக்க....Benefits of Honey: இது தெரிந்தால் இனி தேன் சாப்பிடுவதை நிறுத்த மாட்டீர்கள்...தேனின் 10 மருத்துவ நன்மைகள்...

Follow Us:
Download App:
  • android
  • ios