High Way.. வழி சொல்லும் பச்சை கலர் போர்டு.. ஆனா அதில் இவ்ளோ அர்த்தம் இருக்கா? அட இது தெரியாம போச்சே!

High Way Green Board : நாம் வாழ்க்கையில் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு விஷயம் குறித்த சிறப்பான தகவல்களை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

why all boards in high way are Green color with White letters do you know the reason ans

நெடுஞ்சாலை 

பயணம் என்பது, நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் தான். அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலையில் நாம் பயணிக்கும் பொழுது, நாம் செல்லவிருக்கும் ஊருக்கு இன்னும் எத்தனை கிலோமீட்டர் இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டே செல்வது என்பது ஒரு தனி சுகம் தான். இந்திய அளவில் சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் சுமார் 599 நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் உலகத்தரம் வாய்ந்த எத்தனையோ விஷயங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாம் அந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொழுது உயரத்தில், பச்சை வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்ட பெரிய பலகைகளை நாம் காண்பதுண்டு.

உங்க கணவரை சந்தோஷப்படுத்த எந்த பரிசும் தேவையில்லை.. இந்த 6 விஷயங்களை மட்டும் செஞ்சா போதும்..

அதில், அருகில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் அருகில் உள்ள ஊர்கள், மாவட்டங்கள் மற்றும் பிற நகரங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதெல்லாம் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் என்றாவது ஏன் அந்த பலகைகள் பச்சை நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாம் சிந்தித்து உண்டா? உண்மையில் அவை பச்சை நிறத்தில் வைக்கப்பட்டதற்கு ஏதேனும் காரணம் உண்டா? 

பச்சை நிற அறிவிப்பு பலகைகள் 

இந்த கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில், அதற்கு பதில் ஆம் என்பதே. அந்த பலகைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் இருப்பதற்கு ஒரு மிகப்பெரிய உளவியல் காரணம் இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் கவனத்தை சிதற விடக்கூடாது, பளிச்சென்ற நிறங்களை பார்த்து அவர்கள் எரிச்சல் அடைய கூடாது. 

அதற்காகத்தான் பச்சை நிற பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கூற்றுப்படி, இயல்பாகவே பச்சை நிறம் சாந்தமான ஒரு மனநிலையை கொடுக்கக் கூடியது. பளிச்சென்று தெரியும் அதே நேரம், நம் கவனத்தை சிதறடிக்காத வண்ணம் அது இருக்கும். ஆகவே பச்சையில், வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் அது வாகன ஓட்டிகளுக்கு ஒரு அமைதியான மனநிலமையை தருவதோடு, சட்டென்று அதை கவனிக்க அது உதவுகிறது. ஒரு வேலை Whatspp இதை அடிப்படையாக வைத்து தான் Logo தயார் செய்திருப்பார்கள் போல. 

கழுத்து கருப்பா இருக்கா?.. தயிர் போதுமே.. பளபளன்னு ஜொலிக்க ஈஸி டிப்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios