எந்தெந்த காரியம் நடக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். 

இடையூறு நீங்க - விநாயகரை வணங்க வேண்டும்.

செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீ லக்ஷ்மியை வணங்க வேண்டும் 

நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும்.

வீடும் நிலமும் சேர - செவ்வாய் பகவான், ஸ்ரீ சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் பெற - ருத்திரனையும்,

மனவலிமை உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வணங்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனை வணங்க வேண்டும்.

மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரியை வணங்கவேண்டும்.

புத்திர பாக்கியம் பெற  - சந்தான லெட்சுமியும், சந்தான கிருஷ்ணனையும் வணங்க  வேண்டும்.

தொழில் சிறந்து லாபம் பெற  - திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

புதிய தொழில் துவங்க - ஸ்ரீ கஜலட்சுமியை வணங்க வேண்டும். 

விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி வணங்கவேண்டும்.

சாப்பாட்டு கஷ்டம் நீங்க -  ஸ்ரீ அன்னபூரணியை வணங்க வேண்டும் 

வழக்குகளில் வெற்றி பெற  - விநாயகரை வணங்க வேண்டும்

சனி தோஷம் நீங்க -  ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் வணங்க வேண்டும்

பகைவர் தொல்லை நீங்க -  திருச்செந்தூர் முருகன் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.

பில்லி சூனியம் செய்வினை அகல -  ஸ்ரீ வீரமாகாளி, சக்கரத்தாழ்வார் ,ஸ்ரீ நரசிம்மரை வணங்க வேண்டும்.

திருஷ்டி விலக வேண்டும் என்றால், முத்துமாரி அம்மனை வணங்க வேண்டும்.

அழியாச் செல்வம் ஞானம் சக்தி பெற சிவஸ்துதி செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது