எந்த டிரஸ் போட்டா அழகா தெரிவீங்க

ஒவ்வொருவருக்கும் ஒவொரு விதத்தில் ஆடையை அணிய வேண்டும் என ஆசை படுவார்கள். அதாவது ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப நாம் உடுத்தும் ஆடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆடைகளைத் தேர்வு செய்யும் போது, வண்ணங்கள் பற்றிய அக்கறையோடு தேர்வு செய்ய வேண்டும். அச்சுப்பிசுகாமல் கான்ட்ராஸ்ட் கலர்களைத் தேர்வு செய்யக்கூடாது. கொஞ்சம் மென்மையான கலரில் இருப்பது நல்லது

வெண்மைநிற ஆடைகள் எப்போதுமே உங்களை பளிச்சென காட்டும். குறிப்பாக, மாநிறம் மற்றும் கருப்பு நிறமுடையவர்களை வெண்ணிற ஆடைகள் தேவதைகளாகக் காட்டும். அவர்கள் பீச் கலர், பிங்க், பவுடர் ப்ளூ போன்ற கலர்களையும் கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.

மின்னும் பிரிண்டட் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பவராக நீங்கள் இருந்தால்,  உடைத்தேர்வில் மிகுந்த கவனம் உடையவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

பார்ட்டிகளுக்குச் செல்லும்போது, அதுபோன்ற உடைகளை அணிந்து சென்றால் பார்ட்டிக்கு வரும் ஒட்டுமொத்த கூட்டமும் உங்களையும் உங்கள் ஆடையையும் வெறிக்க வெறிக்கப் பார்ப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்

கருப்பு நிறத்தைப் பெரும்பாலும் மாநிற சருமம் உடையவர்களும் கருப்பானவர்களும் தவிர்ப்பது நல்லது. பிளாக் கலர் உங்கள் சருமத்தை இன்னும் கொஞ்சம் கருப்பாகக் காட்டும்.

ஆடைகளுக்கேற்ற அணிகலன்களைப் பயன்படுத்த வேண்டும். எப்போதுமே உங்களிடம் இருக்கும் எல்லா நகைகளையும் அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. ஆடைக்கேற்ற தோடும் ஒரு சிறிய நெக்பீஸ் மட்டும் அணிந்தாலே போதும். லிப் ஷேடோக்களையும் அதற்கேற்றாற் போல போட வேண்டும்.