Asianet News TamilAsianet News Tamil

கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கோவிட் நடைமுறைகளை பின்பற்றுவது குறைய தொடங்கி உள்ளது. 

When will the Corona 3rd wave hit? Ames doctor shocking information
Author
Tamil Nadu, First Published Jun 19, 2021, 6:09 PM IST

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 2.98 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.85 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7.6 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா முதல் அலையில் பாதிப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால் 2-வது அலையில் உயிரிழப்பு அதிக அளவில் காணப்பட்டது. 2-வது அலை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.When will the Corona 3rd wave hit? Ames doctor shocking information

இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் என்று எய்ம்ஸ் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘’கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கோவிட் நடைமுறைகளை பின்பற்றுவது குறைய தொடங்கி உள்ளது. முதல் மற்றும் 2-வது அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.When will the Corona 3rd wave hit? Ames doctor shocking information

மக்கள் கூட்டங்கள் உருவாகின்றன. மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள். இதனால்தான் தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில சமயங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும். இது சில காலத்துக்கு இருக்கலாம்.கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை பொறுத்து எல்லாம் இருக்கிறது’ என அவர் கூறியுள்ளார். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எல்லாவிதமான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன.


 

Follow Us:
Download App:
  • android
  • ios