இன்று சிவராத்திரி..! இன்று இதை செய்ய மறந்தீங்க... பெரிய இழப்பு  நமக்கு தான்..!  

இன்று சிவராத்திரி என்பதால், இன்றைய இரவு முழுக்க விழித்திருந்து சிவனை வழிபட ஆயத்தமாகி வருகின்றனர் மக்கள்.

அதன் படி, சிவராத்திரியான இன்றைய தினத்தில், கடைபிடிக்க வேண்டிய சில விரத முறைகளையும் வழிபடும் முறையையும் இங்கே பார்க்கலாம். 

இன்றைய நாளில், சிவ நாமத்தை ஜெபித்து, நெற்றியில் சிறிதளவு திருநீறு வைத்துக்கொள்ள வேண்டும். பகலில் உண்ணாமல் இரவு நேரத்தில் உறங்காமல் சிவ நாமத்தை சொல்லி கடவுளை வணங்குவது நல்லது.

வாழ்வில் சகல பாக்கியமும் பெற...

திருவாசகம் மற்றும்12 திருமுறை பாடல்களை பாடி, இரவு முழுக்க நடக்கும் நான்கு கால அபிஷேகத்தை தரிசனம் செய்து மறுநாள் காலை, மற்றவர்களுக்கு அன்னதானம் செய்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். சகல சவுபாக்யமும் பெற முடியும்

சிவராத்திரியின் மகிமைகளில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம் இதுதான். ஒருவர் தன் வாழ்நாளில் தொடர்ந்து 24 வருடங்கள், சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவ கதியை அடைவார். அதுமட்டுமல்லாமல், அவரின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தி அடைவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது

ஆதலால் தான், சிவராத்திரி என்றாலே மிக சிறப்பாக வழிபாடு நடத்தி இரவு முழுக்க விழித்து சிவ நாமத்தை ஜெபித்து ஆசி பெறுவார்கள்.