Asianet News TamilAsianet News Tamil

Red, Orange, Yellow, Green Alert என்ன அர்த்தம் தெரியுமா..? வானிலை Alert விளக்கம் இதோ!

வரவிருக்கும் வானிலை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தீவிரம் குறித்து மக்களுக்கு தெரிவிக்க நிறத்தின் அடிப்படையில் எச்சரிக்கைகள் வெளியிடப்படும்.

what is red orange yellow and green alerts of weather warning explained here in tamil mks
Author
First Published May 2, 2024, 1:07 PM IST

பொதுவாகவே, ஒவ்வொரு பருவ காலங்களிலும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் ஒன்று தான் அலர்ட். அவை மஞ்சள் அலர்ட், பச்சை அலர்ட், ரெட் அலர்ட், ஆரஞ்சு அலாட் ஆகிய வகைகளில் உள்ளன. 

அலர்ட் என்றால் என்ன?
அலர்ட் என்பது எச்சரிக்கை உணர்வை தூண்டும் ஒரு குறியீடாகும். அதாவது, வானிலையில் எச்சரிக்கை தூண்டும் வகையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் அதை மக்களிடம் தெரிவிக்க இந்த அலர்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. 

பொதுவாக, பருவ காலங்களில் அலர்ட்கள் குறித்த அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியீட்டு வரும். அதுவும் குறிப்பாக வரவிருக்கும் வானிலை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தீவிரம் குறித்து மக்களுக்கு தெரிவிக்க நிறத்தின் அடிப்படையில் எச்சரிக்கைகள் வெளியிடப்படும். அவை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்களில் குறியீட்டாக பயன்படுத்தப்படுகிறது. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், வண்ணங்கள் குறித்தும், அவை விளக்கும் சூழ்நிலைகள் குறித்தும் பார்க்கலாம். 

எச்சரிக்கை வண்ணங்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள்:

பச்சை அலர்ட்: பச்சை அலர்ட் வந்தால் மக்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை ஏதாவது எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே இந்த பச்சை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுவிக்கும். இதற்கு இந்த விதமான ஆலோசனையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.

மஞ்சள் அலர்ட்: மோசமான வானிலையை இந்த மஞ்சள் எச்சரிக்கை குறிக்கிறது. வானிலை ஆய்வு மையம் இந்த மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் அன்றாட வாழ்க்கை கூட பாதிக்கப்படலாம்.

ஆரஞ்சு அலர்ட்: மோசமான நிலையில் வானிலை இருக்கும்போது தான் இந்த ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கை விடுவிக்கப்படும் போது மீன்சாரம், போக்குவரத்து, ரயில் சாலை மற்றும் விமானத்திற்கு இடையூறு ஏற்படும். எனவே, இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் சமயத்தில் பயணம் செய்வதை மக்கள் தவிர்ப்பது நல்லது.

ரெட் அலர்ட்: வானிலை மிகவும் மோசமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த ரெட் அலர்ட் விடுவிக்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்த குறியீடு அபாயத்தை உணர்த்தும் குறியீடு ஆகும். இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் போது மக்கள் தங்கள்  உடைமைகளை பார்த்துக் கொள்ள தேவையான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி, போக்குவரத்து, மின்சாரம் விநியோகம் சீர்குலையும். முக்கியமாக இந்த வானிலை சூழ்நிலையால் சில சமயங்களில் உயிர் கூட போகலாம்.

தற்போது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. இந்த வெப்ப அலையானது மாநிலத்தில் அடுத்த 3 நாட்கள் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியை தேடி ஊட்டிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளன. அந்த அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

அறிவுரை: கொளுத்தும் இந்த கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் மதியம் முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், ஒருவேளை வெளியே வந்தால், தலையை தொப்பி அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios