மக்களே உஷார்! குரங்கு அம்மையின் அறிகுறிகள் இதுதான்... தடுப்பூசி இருக்கா? இல்லையா?
Monkeypox Symptoms: தற்போது பரவி வரும் குரங்கு அம்மையின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கொரோனா தொற்று பரவி உலகத்தை உலுக்கியது. அதன் பிறகு சில தொற்றுகள் பரவினாலும் அவை சமாளிக்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் மங்கிபாக்ஸ் என சொல்லப்படும் குரங்கு அம்மை தற்போது இந்தியாவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாவதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தால் அந்த நோய் உங்களுக்கும் பரவும். நோய் பாதித்தவர்கள் உபயோகம் செய்த பொருட்களை பயன்படுத்தினாலும் பரவுகிறது.
அண்மையில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 700 பேர் குரங்கு அம்மை (Mpox) என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தொற்றின் தீவிரத்தால் இதுவரை அங்கு 570 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நோய் 1958 ஆம் ஆண்டில் முதல் முறையாக டென்மார்க்கில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இது புதிய நோய் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது வரை இந்தியா உள்பட 115 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 பேர் இந்தியாவில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் குரங்கு அம்மை தொற்று பரவுவதால் தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், துறைமுகங்களிலும் குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள பயணிகளை கண்காணிப்பதில் கவனமாக செயல்பட அதிகரிகாரிகளுக்கு வலியுறுத்தப்படுகிறது. வங்கதேசம், பாகிஸ்தான் எல்லைகளில் இருக்கும் அதிகாரிகளை சர்வதேச பயணிகளை அனுமதிப்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, நாமும் குரங்கு அம்மை அறிகுறிகளை தெரிந்து கொண்டால் தானே கவனமாக இருக்க முடியும். அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: Monkeypox Virus | குரங்கு அம்மை பரவக் கூடியதா?
குரங்கு அம்மை அறிகுறிகள்:
- உடலில் சீழ் வடியும் கொப்புளங்கள்
- கடும் காய்ச்சல்
- பயங்கரமான தலைவலி
- தசைகளில் வலி
- கடும் முதுகு வலி
- பலவீனமாக உணர்தல்
- தொண்டை வலி, வீக்கம்
இதையும் படிங்க: monkeypox:குரங்கு அம்மை வராமல் தடுப்பது எப்படி? செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன? மத்திய அரசு விளக்கம்
குரங்கு அம்மை நோயின் சிகிச்சை:
குரங்கு அம்மை தாக்காமல் தடுக்க இப்போது வரை தடுப்பூசி ஏதும் தயாரிக்கப்படவில்லை. ஆகவே அதை கட்டுப்படுத்துவது இன்னும் கடினமாக தான் இருக்கிறது. ஆனாலும் குரங்கு அம்மை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலே மருத்துவரை அணுகுவது நல்லது. தொடக்கத்திலே சிகிச்சை எடுத்து கொண்டால் குணமடைய வாய்ப்புள்ளது.
தவிர்க்க முடியுமா?
- குரங்கு அம்மையை தவிர்க்க உலக சுகாதார அமைப்பு சில விஷயங்களை அறிவுத்தியுள்ளது. நோய்வாய்ப்பட்டு சுற்றி திரியும் விலங்குகள், உயிரிழந்த விலங்குகளை தொடுவதையும், அதன் இறைச்சியை சாப்பிடுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- குரங்கு அம்மை பாதிப்புள்ள நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
- நோய் வாய்ப்பட்ட நபர் உபயோகம் செய்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
- உடலுறவு வைத்து கொள்ளும்போது பாதுகாப்பு முறையை கட்டாயம் பின்பற்றுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D