Asianet News TamilAsianet News Tamil

Style kurti : இளசுகளை சுண்டி இழுக்கும் ''குர்தாவுக்கு'' ஏற்ற... மேட்சிங் வெரைட்டி பாட்டம் கலெக்சன்ஸ்...!!

இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பெண்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளில் பேஷன், அழகு, ஆடை, ஷாப்பிங் தொடர்பான தேடல்கள் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன. 

Wearing kurti matching bottom sleeves gta
Author
Chennai, First Published Feb 5, 2022, 11:45 AM IST

இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பெண்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளில் பேஷன், அழகு, ஆடை, ஷாப்பிங் தொடர்பான தேடல்கள் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் உள்ளன.

பேஷன், குறிப்புகளில் அதிகம் தேடப்பட்டவையாக, ஆடைகள் எப்படி டிரெண்டிங்காக போடுவது , வீட்டில் முடி வெட்டுவது எப்படி, முகப்பரு போன்றவற்றை எவ்வாறு அகற்றுவது, முகக் கவசம் எப்படி அணிவது, வீட்டில் உங்கள் தலைமுடிக்கு எப்படி வண்ணம் பூசுவது, கைகளை எப்படி கழுவ வேண்டும். சானிடைசர் (sanitizer) பயன்பாடு தொடர்பான தேடல்கள் முதலிடத்தில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

Wearing kurti matching bottom sleeves gta

இவற்றினுள், பெரும்பகுதி மக்கள் பிரபல ஆடைகளை இணையத்தில் தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக காணப்பட்டனர். 

ஒவ்வொரு காலகட்டத்திற்கு உடை மாற்றம் தேவைப்படும். அந்த வகையில்,பெண்களின் ட்ரெண்டிங் உலகில் தற்போது வரும் டிசைனர் குர்தாக்கள் மிகப்பெரிய மாற்றத்தை செய்து வருகிறது. அதற்கு என்ன மாதிரியான பேண்ட்களை அணிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை  கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

காலேஜ் முதல் அலுவலகம் வரை செல்லும் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற உடையாக தற்போது குர்தி விளங்குகிறது. பெண்களின் உடல் அமைப்பு மற்றும் வயதுக்கு ஏற்றார் போல் வித விதமான டிசைன்கள், வெரைட்டியான கலர்களில் குர்தாக்கள் கடைகளில் கிடைக்கின்றன. அங்கிரக குர்தி, ஸ்மார்ட் குர்தி, கீஹோல், பெல் ஸ்லீவ்ஸ், லேயர்டு குர்தி, ஷர்ட் ஸ்டைல், ஏ-லைன், அனர்கலி, ஹை லோ ஸ்டைல், பாக்கெட் ஸ்டைல், கோட் ஸ்டைல், போஞ்சோ-ஸ்டைல், டபுள் குர்தி, ஃபிரண்ட் ஓபன், சைடு ஓபன் என நூற்றுக்கும் மேற்பட்ட வெரைட்டில் தற்போது குர்த்திக்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. 

அப்படி விதவிதமாக எடுக்கப்படும் குர்தாவுக்கு ஏற்ற வகையில், விதவிதமான பாட்டம் உடன் அணிந்து அசத்துவது எப்படி என பார்க்கலாம்.

Wearing kurti matching bottom sleeves gta

பட்டியாலா பேண்ட்: 

ஸ்டைல் ஸ்டேட்மெண்டாக விளங்கும் பட்டியாலா பேண்ட் உடன் டிசைனர் குர்தா மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த துப்பாட்டாவை அணிந்து கொண்டால் போதும் நீங்கள் திருமணம், வரவேற்பு என எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல அசத்தலாக ரெடி என்று அர்த்தம். உடனே சிஃப்பான், பட்டு, காட்டன், ஜார்ஜெட் அல்லது குர்தாவுடன் பொருந்தக்கூடிய வேறு எந்தப் பொருட்களாலும் செய்யப்பட்ட பாட்டியாலா பேன்ட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

பலாசோ: 

பல வகை டாப்களுடன் மிஸ் மேட்சிங் செய்ய பலாசோ நல்ல தேர்வாக உள்ளது. அங்காரக, பெப்ளம் மற்றும் கழுத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட டிசைனர் குர்தாவுடன் பலாசோ அணிவது செம்ம ட்ரெண்டிங்கான லுக்கை கொடுக்கும்.

வழக்கமாக அணியும் சுடிதார் பாட்டம்: 

வழக்கமாக அணியும் சுடிதார் பாட்டத்துடன் முழங்கால் அல்லது கணுக்கால் வரை உள்ள குர்தியை அணிந்தால் புது ட்ரெண்ட் லுக்கை கொடுக்கும். இந்த வகையில் நல்ல நீண்ட குர்திகளை அணிவது தான் சிறந்ததாக இருக்கும். குட்டையான குர்தியுடன் சுடிதார் பாட்டம் அல்லது லெக்கின்ஸ்களை அணிவது சிறப்பாக அமையாது என்பதால், அதனை தவிர்க்கலாம்.

லாங் ஸ்கர்ட்: 

நீண்ட டிசைனர் குர்தாவை, ப்ளோரல் டிசைன் லாங் ஸ்கர்ட்டுடன் இணைந்து அணியலாம். அதுவே திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் இத்துடன் ஒரு கிராண்ட் டிசைன் கொண்ட துப்பட்டாவை மட்டும் சேர்த்து கொண்டால் போதும்.

ஜீன்ஸ்: 

Wearing kurti matching bottom sleeves gta

குர்தாவுடன் ஜீன்ஸ் பேண்டை அணிவது ஓல்டு ஃபேஷனாக தோன்றலாம். ஆனால், மேலே சொன்ன அனைத்து வகைகளை விடவும் ரொம்ப ஈஸியான மிஸ் மேட்சிக் டெக்னிக் இதுவே. அது நீங்கள் அணியும் குர்தாவுக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் ஆளுமையான லுக்கை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள். குட்டையான பெண்கள் ஸ்லீவ்லெஸ், 3/4 ஹேண்ட் அல்லது ஃபுல் ஹேண்ட் குர்தாவை அணியும் போது உயரமான தோற்றத்தை தருகிறது. குட்டையான அல்லது முழங்கால் வரை உள்ள குர்தாவை ஸ்கின்னி அல்லது கணுக்கால் வரையிலான ஜீன்ஸ் உடன் இணைப்பது அழகான தோற்றத்தை கொடுக்கும்.

மேலே சொன்னவை தவிர்த்து, இண்டி ஸ்டைல் (Indie style), அர்பன்  ஸ்டைல் (Urban style), ஸ்ட்ரீட் வியர் ஸ்டைல் (Streetwear style), 90s கிட்ஸ் ஸ்டைல் (80s style clothing), 2k கிட்ஸ் ஸ்டைல் (Y2K style), ரெட்ரோ ஸ்டைல் (Retro style), போஹோ ஸ்டைல் (Boho style) போன்றவை அதிக அளவில் கூகுளில் தேடப்பட்டு ஆடை கலெக்சன்ஸ் ஆகும். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios