நீட் தேர்வில் 80% வெற்றி பெற இதை முழுமையாக படித்தாலே போதும்..! அமைச்சர் செங்கோட்டையான் அதிரடி ..! 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வருகிறார். அதன்படி புதிய பாடத்திட்டம் மாற்றம் வருகைப் பதிவேடு, இலவச பயிற்சி மையங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கண்டிப்பாக நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உறுதி செய்த பின்னர் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ் வழிகல்வி பயிலும் மாணவர்களும் மிகுந்த பாதிப்பு அடைவார்கள் என எடுத்துரைக்கப்பட்டது. இருந்தபோதிலும் நீட் தேர்வு கட்டாயம் தமிழகத்தில் கொண்டு வரப்படாது என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனாலும் இதனை எதிர்கொள்ளும் பொருட்டு தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட திட்டத்தை முழுமையாக படித்தால், தேர்வில் 80 சதவீதம் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு தரப்பில் இருந்து இலவச நீட் தேர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.