WE should not lightning this side today

தீபங்கள் பேசும்..... இது கார்த்திகை மாசம்

கார்திகம் மாதம் என்றாலே ... எங்கு பார்த்தாலும் ஜக ஜோதியாக காணப்படுவதே....

எல்லா துன்பமும் நீங்கி அனைவரும் எல்லா வளமும் பெற்று நீண்ட நாட்கள் நோய் நொடியில்லாமல் வாழ இறைவனை வேண்டும் மாதமாகவே கார்த்திகை மாதம் உள்ளதுஅக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமே கார்த்திகை மாதம் தான்

கார்த்திகை திருநாளானது கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது அல்லவா...அந்த திருநாள் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதியான இன்று தான் .....

எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா...?|

கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் -கஷ்டங்கள் விலகும்

மேற்குத் திசை - கடன் தொல்லை நீங்கும்

வடக்குத் திசை - திருமணத்தடை அகலும்

மறந்துகூட தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றிவிடகூடாது....

தெற்குத் திசை - நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று திசையில் தாரளமாக விளக்கு ஏற்றலாம். ஆனால் தெற்கு திசை என்பது நல்லது கிடையாது.ஆதலால் தீபம் ஏற்ற முக்கிய தினமான இன்று மறந்து கூட தெற்கு திசை நோக்கி மட்டும் விளக்கு ஏற்ற வேண்டாம்.....

யாருக்காவது தெரியவில்லை என்றாலும்,பெரியவர்கள் சொல்படி கேட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள்