மனைவி கணவனை பற்றியோ அல்லது கணவன் மனைவியைப் பற்றியோ அடுத்தவரிடம் தவறாக பேசக்கூடாது.

கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் வேண்டும் காமம் என்பது பெண்ணின் மீது வைப்பது மட்டுமல்ல காமம் என்பது ஒரு பொருளின் மீது வைக்கின்ற அதிகப்படியான ஆசையும் தான். பிறர் சொத்தை அபகரிக்க கூடாது. தேவையின்றி பருவப் பெண்களை தொட்டு பேச கூடாது. அது நமது சகோதரியாக இருந்தாலும் கூட.

எப்பொழுதும் பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தக்கூடாது. நமது கடமையை பிறர் செய்யவிட கூடாது. வாழை இலைகளில் உணவு பரிமாறும்போது உப்பிட்ட பதார்த்தங்களை மட்டும் தண்டிற்கு மேலேயும், உப்பிலாதவைகளை கீழேயும் பரிமாறவேண்டும். 

வீட்டில் இரு வேளைகள் மணி சப்தத்துடன் கூடிய பூஜை செய்தல் அவசியம். காலை மாலை இருவேளையிலும் தீபமேற்றி வீட்டின் முன் வாசலைத் திறந்த நிலையிலும் பின் வாசலை மூடிய நிலையிலும் வைத்தல்வேண்டும்.

வாங்கிய கடனை திருப்பி தராமல் ஏமாற்றக்கூடாது. கடன் தருவதையும் பெறுவதையும் தவிர்த்தல் நல்லது. அது இருவருக்கும் நன்மை பயக்கும். விடியற்காலை 5 மணிக்கு விழித்தெழ வேண்டும். விழித்தவுடன் நம்மை தாங்கும் பூமி தாயை வணங்கி வரவேண்டும். நகங்களை அளவுக்கு அதிகமாக வளர்த்தலும் அதனைப் பற்களால் கடித்தலும் செய்யக்கூடாது. இதன் மூலம் கண்களுககு புலப்படாத தேவையில்லாத கிருமிகள் பரவும்.