we should give food to crow daily

காக்கைக்கு உணவு அளிப்பது என்பது நம்முன்னோர்கள் காலம் தொட்டு நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.

காக்கைக்கு உணவு

தினமும் காலையில் எழுந்தவுடன்,குளித்துவிட்டு,விளக்கேற்றி பூஜை செய்து விட்டு, உலர் திராட்சையை காக்கைக்கு வழங்கலாம்.

இதனை செய்து வந்தால் நம் வாழ்வில் அனுபவித்து வரும் அத்தனை கஷ்டங்களும் பறந்து போகும் என்பது ஐதீகம்.

இவ்வாறு செய்ய முடியாதவர்கள்,புதிதாக தயாரிக்கப்பட்ட வெள்ளை சாதத்துடன் எள்ளு கலந்து காக்கைக்கு கொடுத்து வர துன்பங்கள் பறந்து போகும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்

சனி பகவான் அருள் கிடைக்கும் காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம்,சனி பகவானின் அருள் நமக்கு கிடைக்கும்.அதாவது சனி பகவானின் வாகனம் காக்கை,எனவே எளிதில் சனி பகவானின் அருளும் கிடைக்கும்.

அதே போன்று,முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்

இறந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வருவார்கள் என்பது கூறப்படுகிறது. அதனால் காக்கைக்கு உணவு கொடுத்து வழிபட,நமக்கு முன்னோர்களின் ஆசியும் வந்து சேரும்.