Asianet News TamilAsianet News Tamil

"டெங்கு" தீவிரமடையும் முன் நாம் செய்ய வேண்டியது என்ன..?

மழைக்காலம் தொடங்கிய உடன் டெங்கு வந்துவிடுமோ என்ற பயம் பொதுவாக அனைவருக்குமே வந்து விடுகிறது அல்லவா..? கொசுக்கடி மூலம் வரக்கூடிய டெங்கு மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

we have to take dengue precautions
Author
Chennai, First Published Jan 24, 2019, 2:55 PM IST

"டெங்கு" தீவிரமடையும் முன் நாம் செய்ய வேண்டியது என்ன..? 

மழைக்காலம் தொடங்கிய உடன் டெங்கு வந்துவிடுமோ என்ற பயம் பொதுவாக அனைவருக்குமே வந்து விடுகிறது அல்லவா..? கொசுக்கடி மூலம் வரக்கூடிய டெங்கு மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

திடீரென தோன்றும் அறிகுறிகளான,106 டிகிரி பாரநெட் அளவிற்கு  காய்ச்சல், தடித்து காணப்படும் லிம்ப்னோடு,வாந்தி,மயக்கம்,மூட்டு வலி, உடல் முழுக்க அசதி என சொல்லிக்கொண்டேபோகலாம். பொதுவாகவே டெங்குவால் பாதிப்பு ஏற்பட்டபின்பு 7 நாட்களில்  அறிகுறிகள் தோன்ற தொடங்கும், பத்து நாட்களில் குணமடைய தொடங்கும்.

சில சமயத்தில் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த கசிவு ஏற்பட்டு மரணம் கூட ஏற்படலாம். டெங்கு காய்ச்சலுக்கு என நேரடியாக எந்த மருந்தும் கிடையாது. ஆனால் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உடல் வலியை குறைக்கவும், அதற்கு தேவையான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பவர்.

we have to take dengue precautions

அதே போன்று, உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிபிப்பது முதல் பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம்.ரத்த தட்டணுக்கள் குறைந்து ரத்த கசிவு ஏற்பட்டால், இது போன்ற சமயத்தில் ப்ரூபின், ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது ரத்த கசிவு அதிகமாக ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தக்க சமயத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. 

we have to take dengue precautions

ஒரு சிலருக்கு டெங்கு வந்ததற்கான எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லாமல் இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் ரத்த கசிவுடன் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதில் முக்கியமாக 12 வயதிற்குட்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கூடுதலாக பாதிப்பு இருக்கக்கூடும்.இவை எல்லாம் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியது, நம்மை எப்படியாவது கொசுவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே..!

Follow Us:
Download App:
  • android
  • ios