முகத்திற்கு அழகு கூட்டுவதில் புருவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. மூக்கு தாடை போன்றவற்றின் வடிவத்தை மாற்றுவது கடினம். ஆனால் புருவத்தின் வடிவத்தை மாற்றி அழகு படுத்திக் கொள்ளலாம். முக அழகு சுமாராக உள்ளவர்கள் கூட புருவத்தை நன்கு மெருகேற்றி அழகுபடுத்திக்கொள்ளலாம்.

இதனால் முக அழகு கூடும் முகத்தில் மூக்கு கண் குறைபாடு உள்ளவர்கள் நீண்ட முகத்தை பெற்றவர்கள் போன்றோர் தங்கள் புருவ அழகை மெருகேற்றினால் அக்குறைபாடுகள் மறைக்கப்பட்டு முகம் அழகாய் தோற்றமளிக்கும்.

புருவங்களின் வகைகள்

அடர்ந்த புருவம் 

ஒன்றோடு ஒன்று இணைந்த புருவம்

அடர்த்தி குறைவான மெல்லிய புருவம்

நீண்ட புருவம் 

குறுகலான புருவம் இப்படியாக சில புருவ வகைகளை பார்க்கலாம்.

புருவத்தின் அடர்த்தி குறைவாக இருந்தால் முதலில் பிரவுன் நிறத்திலான பென்சிலை பயன்படுத்தி மென்மையான புருவத்தை வரைய வேண்டும். இவ்வாறு செய்தாலே போதும் புருவம் அடர்த்தியாக இருப்பது போல தோன்றும் பின்பு கருப்பு நிற பென்சிலால் இயற்கை நிறம் கொடுத்து புருவத்தின் வடிவத்தை சரி செய்ய வேண்டும்.

அடர்த்தியான புருவம் இருந்தால் பிரஷ் கொண்டு சீவி சற்று சரி செய்ய வேண்டும். கண்களுக்கிடையில் அகலம் அதிகமாக இல்லை என்றால் புருவங்களுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களின் தொடக்கத்திலிருந்து சிறிது தூரத்திலிருந்தே புருவத்தை வரைய வேண்டும்.


 
கண்ணின்  மத்திய பாகம் கடக்கும் போது சிறிதளவு வளைத்துநீட்டி புருவம் ஷேப் செய்தால் மிகவும் அழகா இருக்கும் புருவங்களில் உள்ள ரோமத்தை நீக்க எப்போதும் ஹேர் ரிமூவர் பயன்படுத்தக் கூடாது.

புருவத்தை அழகு நிலைய நிபுணர்களின் உதவியோடு ஷேப் செய்துக் கொண்ட பின் அதனை பராமரிப்பது மிகவும் அவசியமானது. புருவங்களில் அதிக ரோமம் இல்லாதவர்கள் அடிக்கடி விளக்கெண்ணையை தேய்த்து வர ரோமங்கள் வளரும் புருவத்தில் பொடுகு காணப்படுபவர்கள் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தினால் குணமாகும்.

தினமும் புருவத்தில் ஆலிவ் எண்ணையை தடவி படுத்தாள் புருவங்கள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.