வங்கியிலிருந்து பணம் எடுக்க அதிரடி தடை .....!!! பாதிப்பு யாருக்கு ....?

பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, பல நெருக்கடிகள் ஏற்பட்டது.

வங்கி கணக்குகளில், டெபாசிட் செய்வதற்கு கூட பல நெருக்கடிகள் உள்ள நிலையில், இரண்டரை லட்சத்திற்கு மேல் , டெபாசிட் செய்த பணத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது....

இந்நிலையில், அவ்வாறு அதிக அளவில் டெபாசிட் செய்த பணத்திற்கு , சரியான ஆவணங்கள் காண்பிக்கப்படவில்லை என்றால், குறைந்த பட்சம் 4 ஆண்டுகளுக்காவது, இந்த பணத்தை வெளியில் எடுக்க முடியாது.

அதுமட்டும் இல்லாமல், அவ்வாறு கணக்கில் வராத பணத்திற்கு, அதிக பட்சமாக , 90 சதவீதம் வரை வரி விதித்து, நீண்ட வருடங்களுக்கு பயன்படுத்த முடியாதவாறு, வங்கி கணக்கிலே பிளாக் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.........

அதே சமயத்தில், கணக்கில் வராத பணத்திற்கு உண்டான வரியை பிடித்தம் செய்த பின்னரே , மீதமுள்ள பணத்தை மட்டும் பல வருடங்களுக்கு பிறகே, வங்கி கணக்கில் இருந்து வெளியில் கொண்டுவரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.......