ஆண்களே....வேஷ்டியை இப்படி கூட ஸ்டைலா அணியலாம் தெரியுமா உங்களுக்கு...!

ஆண்கள் என்னதான் டிப் டாப்பா ஆடை அணிந்தாலும் வேஷ்டி சட்டை அணியும் போது இருக்கக் கூடிய அந்த ஒரு லுக் வேறு எந்த ஒரு ஆடையிலும் கிடைக்காது என்றே கூறலாம்.

வேஷ்டி என்றாலே வெள்ளை அல்லது க்ரீம் கலரில் மட்டும் தான் வரும் என்ற நினைப்பில் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ள ஒரு சம்பவம் என்வென்றால் இப்போதெல்லாம் நிறைய கலர்களில் வர தொடங்கி விட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவப்பு நிற வேஷ்டிகள் கோவில் பூசாரிகளால் அணியப்படுகிறது.

தென்னிந்தியர்கள் அணியும் முறை

பஞ்சகட்டம் (ஐந்து முடிச்சுகள் அல்லது ஐந்து மடிப்புகள்) மற்றும் சாதாரண மடிப்பு முறைகளில் வேஷ்டியை அணிகின்றனர்

சாதாரண மடிப்பை கொண்டு, தமிழ்நாடு கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக போன்ற மாநிலத்தில் சாதாரண வேட்டி அணியும் முறை உள்ளது

எட்டு முழ வேஷ்டி

எட்டு முழ வேஷ்டியை கொண்டு, இடுப்பை சுற்றிலும் கட்டி அதன் மேல் முனைகளை பெல்ட் போட்டு கட்டிக்கொள்கின்றனர்.

இந்த ஸ்டைல் தென்னிந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.வயலில் வேஷ்டி அணிந்து வேலை செய்பவர்களும் அதிகம்.

மேலும் பொதுவாகவே வேஷ்டியை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார்  மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வேஷ்டி கட்டும் பழக்கம் அதிகமாக உள்ளது

மேலும் இந்த வேஷ்டிகள் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொள்வதும் இல்லை. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட வேஷ்டிக்கு என்றுமே அதிக வரவேற்பு உண்டு.