மறந்து விடாதீங்க..! உங்கள் நோயை குணப்படுத்த உங்கள் விரல் மட்டும் போதும்..! 

மன அழுத்தம் குறைய கட்டை விரல் ..! 

நமது கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்தால் மனம் அழுத்தத்தை குறைத்து, மன நிலையை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நல்ல உறக்கம் வரும். வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்திற்கு நன்கு உதவும். 

பலவீனம் குறைய ஆள்காட்டி விரல் ..!

ஆள்காட்டி விரலில் அழுத்தம் கொடுத்து வந்தால் நம்முடைய பலவீனம் மற்றும் பயம் குறைந்து விடும். அடிமைத்தனம் என்ற எண்ணம் நம் மனதில் இருந்து நீங்கும். காரணம் நமது ஆள்காட்டி விரல் சிறுநீர்ப்பையுடன் இணைப்பு கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளும். நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

கோபம் குறைய நடு விரல்..!  

நடுவிரலில் அழுத்தம் கொடுத்து வந்தால் கோபம் குறைந்து விடும். தலைப்பகுதியில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலியை நீக்கிவிடும். கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் நடுவிரல் இணைப்பு கொண்டுள்ளது. உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கும்.

மோதிர விரல்..! 

மோதிர விரலும் கட்டை விரலும் ஒரே பண்பைக் கொண்டுள்ளன. நம்மில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்கள் பிறக்க வழி வகை செய்கிறது. மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. எனவே சுவாசக் கோளாறுகள் எளிதில் போக்கும். மேலும் நரம்பு மண்டலம் தசைகளுக்கு வலிமை அதிகரிக்கும். உடற்பயிற்சியும் அதிகரிக்கும்.

ரத்த ஓட்டம் சீராக இருக்க சிறுவிரல் ..! 

சிறுவிரலில் அழுத்தம் கொடுத்து வந்தால் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். நமது எண்ணம் செயல் அனைத்தும் ஒரே வழியில் கூர்மையாக்கும்.  

மன அழுத்தத்தை நீங்கும் உள்ளங்கை...! 

உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தால் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் பறந்து போகும். மன அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாக பல்வேறு விஷயங்களை சொல்லலாம். ஆனால் மன அழுத்தம் தான் நம் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தை நம்மிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள உள்ளங்கை பெரிதாக உதவும். உள்ளங்கையினுள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வர வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபடலாம்.