Asianet News TamilAsianet News Tamil

PF பணம் எடுக்க போறீங்களா? 75 % எடுக்கலாம்.. ஆனால் உங்கள் சம்பளத்தில் எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸ் தொகை பெறலாம். இப்போது பெறும் தொகையை மீண்டும் EPFO அலுவலகத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

we can take 75 % of fund from pf
Author
Chennai, First Published Apr 11, 2020, 5:42 PM IST

PF பணம் எடுக்க போறீங்களா? 75 % எடுக்கலாம்.. ஆனால் உங்கள் சம்பளத்தில் எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவிக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிஎப் தொகை  கட்டாயம் உதவும்.அதன் படி கொரோனா எதிரொலியால், பி.எப் கணக்கில் இருக்கும் பணத்தில் 75 % பணத்தை பெறலாம் என அரசு தெரிவித்து உள்ளது. 

ஆனால் எவ்வளவு பணம் கைக்கு கிடைக்கும் என்பது குறித்து ஒரு தெளிவு இல்லாமல் இருக்கின்றனர் மக்கள். அவர்களுக்கான பதிவு தான் 

கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸ் தொகை பெறலாம். இப்போது பெறும் தொகையை மீண்டும் EPFO அலுவலகத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஒருவரின் மொத்த PF பாக்கித் தொகையில் அதிகபட்சமாக 75 சதவிகித தொகையை பெறலாம். உதாரணமாக ஒருவருக்கு PF பாக்கித் தொகை 2 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால், அவர் 1,50,000 ரூபாயை கொரோனா வைரஸை காரணமாகக் காட்டி பெறலாம். இது தான் பொதுவான கணக்கு. 

we can take 75 % of fund from pf

ஆனால் இதிலும் அரசு ஒரு செக் வைத்திருக்கிறது. ஒவர் சம்பளமாகப் பெறும் தொகையில் Basic Pay + DA (Dearness Allowance) இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மொத்த தொகையை 3 மாதம் எவ்வளவு பெறுவீர்களோ அவ்வளவு தான் PF தொகையில் இருந்து கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம் என்கிறார்கள். 

we can take 75 % of fund from pf

உதாரணமாக: ஒரு  நபர் மாதம் 15,000 ரூபாய் பேசிக் ஆகவும், 5,000 ரூபாயை டிஏ-வாகவும் பெறுகிறார். ஆக மொத்தம் 20,000 ரூபாய் . எனவே 20,000 * 3 மாதம் = 60,000 ரூபாய். ரவிக்கு PF பாக்கித் தொகை எத்தனை லட்சம் இருந்தாலும் சரி, அவர், தற்போது 60,000 ரூபாயை மட்டும் தான் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

we can take 75 % of fund from pf

எனவே பணத்தேவை இருப்பவர்கள், இந்த ஒரு தருணத்தில் பிஎப் பணத்தில் இருந்து உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அல்லது  ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் தான் வேண்டும் என்றாலும், அந்த தொகை குறைவான தொகையாக இடுந்தாலும் பி.எப் கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios