பொடுகு தொல்லைக்கு வந்துவிட்ட்டது முடிவு..! அதுவும் ஒரே வாரத்தில்.... 

நம் உடல் ஆரோக்கியம் சீராக இருந்தால்தான் அனைத்துமே சீராக இருக்கும். உதாரணத்திற்கு முடி கொட்டுதலை கூட எடுத்துக் கொள்ளலாம். முடி கொட்டினால் கவலை நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும். என்ன செய்தாலும் முடி கொட்டுகிறதே என்று கவலை மீண்டும் மீண்டும் வரத்தோன்றும். சரி இதற்கு என்னதான் தீர்வு. ஒரு சிலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் ஒரு சிலர் முடி கொட்டாமல் இருக்க பலவிதமான ஷாம்பூ பயன்படுத்துகிறார்கள்.

சரி முடி கொட்ட என்ன தான் காரணம் என யோசிக்க வேண்டாமா? முடி கொட்ட பல காரணங்கள் இருந்தாலும் பொடுகுத்தொல்லையால் அதிக முடி கொட்ட வாய்ப்புகள் அதிகம். அப்படியே முடி கொட்டவில்லை என்றாலும் பொடுகு தொல்லையால் முகம் மற்றும் சருமம் பொலிவிழந்து சிறு சிறு குருக்கள் ஆரம்பிக்கும். மேலும் சருமம் எரிச்சலை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட பொடுகை, மிக எளிதாக எப்படி அகற்றலாம் என்பதை பார்க்கலாமா?

ஆப்பிள் 1, ஓட்ஸ் 2 ஸ்பூன் போதும், அதாவது ஆப்பிளை சிறிது சிறிதாக கட் செய்து அதனுடன் ஓட்ஸை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளலாம். இதனை பொடுகு உள்ள இடங்களில் தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி எப்போதும் தலைக்கு குளிப்பது போலவே குளித்து முடியை தூய்மையாக்கிக்கொள்ளலாம். இது போன்று வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தாலே போதும் பொடுகு தொல்லை இருக்கவே இருக்காது.