we can prepare thatu vadai in home itself

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றும் மிக பிரபலமாக இருக்கும்.அது போன்று தட்டு வடை என்றாலே சேலம் மற்றும் ஈரோடு தான் என பலரும் நம்மிடம் சொல்வதை கேட்க முடியும் அல்லவா...

அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த தட்டு வடையை செய்வது அவ்வளவு பெரிய கம்ப சூத்திரம் அல்ல.... மிகவும் எளிதான ஒன்று தான் ...

வாங்க தட்டு வடை எப்படி செய்வது என்பதை பார்கலாம்

தட்டு வடைசெட்

சமைக்க தேவையானவை

தட்டு வடை – வேண்டிய அளவு

காரட் – 2(துருவியது)

தேங்காய் அல்லது புதினா சட்னி (கெட்டியா அரைச்சது )

பீட்ரூட் – 2(துருவியது)

உணவு செய்முறை : தட்டு வடை செட்

Step 1.

முதலில் தட்டுவடை செட் செய்யறது ரொம்ப சுலபம். முதல்ல காரட் அண்ட் பீட்ரூட் துறுவல கலந்துருங்க .ஒரு தட்டுவடை எடுத்துகோங்க. கொஞ்சம் சட்னிய அதில தடவுங்க . இப்ப கலந்து வச்ச துருவலை கொஞ்சம் அந்த தட்டுவடை மேல வைங்க

Step 2.

இப்ப இன்னொரு தட்டுவடைல கொஞ்சம் சட்னிய வச்சி அதை இது மேல வச்ச தட்டுவடை செட் ரெடி . கொஞ்சம் காரம் வேணும்னா சட்னிக்கு பதிலா ஊறுகாய உபயோகப்படுத்திக்கலாம்.

அவ்ளோ தான் ...வெரி சிம்பிள்.. இதை விட்டுட்டு ரயிலில் போகும் போதும் வரும் போதும் கூட ஆனு பார்த்துக்கிட்டு எதுக்கு....நீங்களே செய்து நீங்களே கொண்டுபோங்க.... ரசிச்சி ருசிச்சி நன்றாக சாப்பிடுங்க