உங்கள் வீட்டில் இது  இருந்தால் போதும்....எதையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம்..!

அழகு முதல் ஆரோக்கியம் வரை அனைத்தும் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மை  மேம்படுத்திக்கொள்ளலாம்.இதற்காக பணத்தை அதிக அளவில் செலவிட்டு மிக உயரிய  ரசாயனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது  அவசியம் இல்லாத ஒன்று தானே....

அழகு குறிப்புகள்:

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.  தினமும் இவ்வாறு செய்வதால் முடிவளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். 

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல்பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால்,  விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். 

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை  கலந்து தலையில் லேசாகதடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.

இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். 

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்து குளித்தால், தலைமுடிபளபளப்பாகும். 

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள்  பிரகாசமாக இருக்கும். 

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். 

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். 

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி  அரைமணி நேரம் கழித்து கழுவிவந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். 

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவைகலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்டதழும்பும் மறையு