ஒற்றை தலைவலியை ஒரே நிமிடத்தில் போக்க...!

நாம் வாழும் இந்த வாழ்க்கை முறையில் உட்கொளும் உணவு முறைகள் முதல் அணியும் ஆடைகள் வரை அனைத்தும் மாறி விட்டது என்றே  கூறலாம்

இதனுடைய விளைவு தான்....இன்று நாம் அனுபவிக்கும் பல பிரச்சனைகள்..இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் நம்முடைய இயந்திர வாழ்கையில் அலுவலக வேலை, சரியான நேரத்தில் உண்ணாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால், ஒற்றை தலைவலி என்ற ஒன்று ஒரு சிலருக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்...

அந்த வலியை தாங்கவும் முடியாமல்.....வேலையில் கவனமும் செலுத்த  முடியாமல் தவிக்கும் நிலை என்பது மிகவும் கடினமான ஒன்றே என்று  கூறலாம்...

ஒற்றை தலைவலிக்கு என்ன காரணம் ..?

கோபம், மன அழுத்தம், பதற்றம்,அதிக நேர பயணம், தூக்கமின்மை, மதுபானம், சாக்லேட், ஜூஸ் உள்ளிட்டவற்றை நேரம் காலம் பார்க்காமல்  எடுத்துக்கொள்வது

இதேபோன்று அதிக வெளிச்சம், கால நிலை மாற்றம், புதிய மருந்து எடுத்துக்கொள்ளும் போது....இது போன்ற சில சமயத்தில் ஒற்றை தலைவலி வருவது உண்டு.

எப்படி சரி செய்வது தெரியுமா..?

ஒற்றை தலைவலியை முழுமையாக மீண்டும் வராமல் தடுக்க முடியுமா  என்றால் அது சந்தேகமே...ஆனால் வந்தவுடன் அதிலிருந்து விரைவில் தப்பித்துக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து, அதனை அரைத்து நெற்றியில் கட்டலாம்

இன்னொரு வழி: குளிர்ந்த தண்ணீரில் ஒரு துணியை நனைத்து, கழுத்து மற்றும் நெற்றியில் கட்டுவது ஆக சிறந்தது. பின்னர் கை மற்றும் கால்களை சுடு தண்ணீரில் வைப்பது நல்லது. இவ்வாறு செய்தால்  ஒற்றை தலைவலிக்கு மிக சிறந்த முறையாக இது அமையும்

இதேபோன்று வெதுவெதுப்பான நீரில் தலையில் ஒத்தடம் தரலாம்

உச்ச தலையில் மசாஜ் செய்வது மிக சிறந்த வழி

அமைதியான அறையில் அமர்ந்தவாறு, தன் கைகளை கொண்டு உச்ச தலையில் மெதுவாக சுழற்சி முறையில் மசாஜ் செய்து வந்தால் ஒற்றை தலைவலி பறந்து போகும்

இதற்காக வேறு ஒருவர் உங்கள் உச்சத்தலையில் மசாஜ் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். வலியும் பறந்துப்போகும்.