we can grow the plant like this also

மரம் செடி வளர்ப்பதில் எல்லோருக்குமே தனி ஆர்வம் இருக்கும் அல்லவா..?

அதனால் தான், சாலையின் ஓரங்களில் விற்கப்படும் பல அழகிய வண்ண பூக்கள் செடிகள் முதல் மூலிகை செடிகள் வரை, பிளாஸ்டிக் கவர்களில் வைத்திருப்பதை பார்த்து இருப்போம்.

அதனை வாங்கும் போது, பிளாஸ்டிக் கவரிலிருந்து எடுத்து,தனியாக அதற்காக உள்ள பூந்தொட்டியில் வைத்து வளர்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது அதற்கு மாற்றாக, நாம் பயன்படுத்தும் இளநீரை,குடித்துவிட்டு கீழே போட்டுவிட்டு வராமல், அதனுள் மண்ணை போட்டு வைத்து செடி வளர்க்கலாம்.

ஒரு கட்டத்தில் பெரிய செடிகளாக வளர்ந்த பின், அதனை அப்படியே மண்ணில் புதைக்கலாம்.

இளநீர் மட்டைகள் மண்ணிற்கு வளங்களாக அமையும், இதை விட்டு விட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தினால்,அது மறக்காமல் மண்ணிலேயே இருக்கும்..இதனால் பாதிப்புதான் அதிகமாகும்.

 எனவே நமக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும் இந்த முறையை இனி நாம் அனைவருமே மேற்கொள்ளலாம்.