அசல் ஆதார் அட்டைக்கு பின் ரூ. 50 ..!  UIDAI அதிரடி...!  

ஆதார் அட்டை தொலைந்து விட்டால் புதிய அசல் ஆதார் அட்டையை பெற 50 ரூபாயை ஆன்லைனில் செலுத்தி பெற முடியுமென யுஐடிஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்திற்காகவும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காகவும் நாடு முழுக்க கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து ஆதார் அட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆதார் அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது பழுதடைந்து விட்டாலோ ஆதார் எண்ணை கொண்டு புதுமையான அசல் ஆதார் அட்டையை இ-சேவை மையங்களுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். அல்லது www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint என்ற ஆப்ஷனுக்கு சென்று, புதிய ஆதார் அட்டை வாங்க விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முன்னதாக ஆதார் அட்டை தொலைந்து விட்டால், அதற்கான  நகலை மட்டும் இ- சேவை மையத்திற்கு சென்று பெரும் வசதி இருந்தது. ஆனால் இனி அப்படியெல்லாம் இல்லாமல், அசல் ஆதார் அட்டையை  வெறும் 50 ரூபாயை ஆன்லைனில் செலுத்தி பதிவு செய்துக்கொண்டால் போதும், நம் வீட்டிற்கே ஆதார் அட்டை வந்து சேரும். நாடு முழுக்க ஆதார் அட்டைக்காக இதுவரை பதிவு செய்து உள்ள 92 கோடி பேரில், 90 கோடி பேருக்கு ஆதார் எண் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயனுள்ள திட்டத்தால் புதிய ஆதார் அட்டை வேண்டுபவர்கள் மிக எளிதாக பெற்றுக் கொள்ள முடியும்.