இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி எது தெரியுமா..? 

ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்தவர்கள் ஒரு சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி மேற்கொண்டு வந்தாலே போதுமானது. எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம்.

அதற்கு கீழ் உள்ள சில டிப்ஸ் மறக்காம கடைபிடியுங்கள்..! 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்

யாரிடமும் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.. தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிட்டு வந்தாலும் ரத்த அழுத்தம் குறையும். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி கட்டாயம் தேவை. உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நெல்லிக்காய் சாப்பிடுவது  நல்லது. கீரை வகைகள் பழங்கள் சாப்பிடுவது நல்லது. நம்  மனம் சாந்தமாக வைத்துக்கொள்ள தினமும் யோகா செய்வதும் நல்லது

உடல் பருமனாக இருந்தால் கட்டுப்படுத்துவது  நல்லது. மேலும் அடிக்கடி மது அருந்துவது இருத்தல் கூடாது. இது போன்ற சில டிப்ஸ் கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்