அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்.
ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? என்று கேட்டால் உள்ளது என்பது தான் பதில்.
.ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.
, 1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம்.
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.
3) கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும்.
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகளை உருவாக்க தாமிரம் உதவுகிறது.
6) செரிமானத்தை மேம்படுத்தும்
7) இரத்த சோகையை எதிர்க்கும்
8) கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது.
10) சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும்.
