Asianet News TamilAsianet News Tamil

உங்கள் வாட்டர் பாட்டிலை இப்படி சுத்தம் பண்ணுங்க.! அழுக்கு கிருமி வாடை ஏதும் இருக்காது..!!

நாம் அடிக்கடி பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலை எப்படி சுத்தம் செய்வது என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்

water bottle cleaning tips and tricks in tamil mks
Author
First Published Oct 4, 2023, 11:15 AM IST

பொதுவாக சமையலறையில் காணப்படும் பல்வேறு பொருட்களை விடாமுயற்சியுடன் சுத்தம் செய்கிறோம். ஆனாலும், நாம் அடிக்கடி அத்தியாவசியப் பொருளான தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்வதில் மறந்து விடுகிறோம். பலர் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் பாட்டில்களை ரொம்ப நாளாக கழுவாமல் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. ஏனெனில், நீண்ட நாள் கழுவாமல் இருக்கும் பாட்டிலில் கறைகள் குவிந்து இருக்கும். அதுமட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பாட்டில்களில் துர்நாற்றம் வீசும். எனவே, அவற்றை நீங்கள் தண்ணீரில் கழுவினால் மட்டும் போதாது; சிறப்பு சுத்தம் தேவை. அந்தவகையில், உங்கள் பாட்டில்களை பாக்டீரியாவிலிருந்து விடுவித்துக்கொள்ள உதவும் சில ஹேக்குகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

water bottle cleaning tips and tricks in tamil mks

வினிகர்: வினிகர், ஒரு பல்துறை சமையலறை மூலப்பொருள் ஆகும். இது சமையல் பயன்பாட்டிற்கு மட்டுமல்ல; பாட்டில்களை சுத்தம் செய்வதற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தண்ணீர் பாட்டிலில் துர்நாற்றம் வீசினால், வெந்நீரில் வினிகரை கலந்து பாட்டிலில் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின் பாட்டிலை நன்கு குலுக்க வேண்டும். பின்னர் பாட்டிலை வழக்கம் போல் கழுவி காய வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: மினரல் பாட்டிலில் ஏன் காலாவதி தேதி எழுதப்பட்டுள்ளது?

water bottle cleaning tips and tricks in tamil mks

பேக்கிங் பவுடர்: பாட்டில் சுத்தம் செய்வதில் பேக்கிங் பவுடர் உங்களுக்கு மிகவும் உதவும். இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் 3 முதல் 4 தேக்கரண்டி வினிகரை எடுத்து, வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடரைச் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை பாட்டிலின் உள்ளே வைத்து சிறிது நேரம் வைக்கவும். பின்னர், அனைத்து கறைகளையும் திறம்பட அகற்ற பாட்டிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டையும் தேய்க்கவும். பின் எப்போதும் போல பாட்டிலை நன்கு கழுவ வேண்டும்.

இதையும் படிங்க: water bottles: தண்ணீர் பாட்டிலில் டாய்லெட் சீட்டை விட 40,000 மடங்கு மோசமான பாக்டீரியா இருக்கு..அதிர்ச்சி தகவல்

வாஷிங் லிக்விட்: உங்களுக்கு பரிச்சயமான ஏதாவது ஒரு வாஷிங் லிக்விடை பாட்டில்களை சுத்தம் செய்வதற்கு எடுத்து கொள்ளுங்கள். பின் அவற்றை தண்ணீரில் கலந்து பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்க வேண்டும். மேலும் இவற்றை கொண்டு பாட்டிலின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இவ்வாறு செய்வதால் பாட்டிலில் படிந்திருக்கும் கறை நீங்கும்.

water bottle cleaning tips and tricks in tamil mks

எலுமிச்சை: உங்கள் பாட்டிலை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சம்பழம் உங்களுக்கு மிகவும் உதவும். இதற்கு முதலில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து, அவற்றை பாட்டிலில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், எலுமிச்சைத் தோலில் சிறிது வெள்ளை உப்பைத் தூவி, பாட்டிலின் வாய் பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இந்த நுட்பங்கள் உங்கள் பாட்டிலில் வளரும் கிருமிகளை திறம்பட அகற்றும்.

டிஷ் சோப்பு: உங்கள் பாட்டில்களை சுத்தம் செய்ய சாதாரண டிஷ் சோப்பும் பயன்படுத்தப்படலாம். ஸ்க்ரப்பிங் பேடில் சிறிது டிஷ் சோப்பை தடவி, பாட்டிலின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யவும். அதுபோல் ஒரு சிறிய அளவு சோப்பை தண்ணீரில் கலந்து, பாட்டிலில் ஊற்றி, உட்புறத்தை முழுமையாக சுத்தம் செய்ய பாட்டிலை நன்கு குலுக்கவும். பின் எப்போதும் போல தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி காய வைக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முக்கிய குறிப்பு: பிளாஸ்டிக் பாட்டில்களை சுத்தம் செய்யும் போது,   மிகவும் சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். கூடுதலாக, சுகாதார காரணங்களுக்காக ஒவ்வொரு 5 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாட்டில்களை மாற்றுவது நல்லது. உங்கள் பாட்டில் கலை சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த உறவு குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios