அரசு பள்ளியில் ஆச்சர்யம்..! "தண்ணீர் பெல்" திட்டத்திற்கு குவியுது பாராட்டு..! 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதிக்கு அருகே உள்ள வையம்பட்டி பகுதியில் உள்ளது கருங்குளம் என்ற கிராமம்

இந்த கிராமத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி தங்களுடைய ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ள அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவர் ஒரு அற்புத திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

அதன்படி மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு இடைவேளையின் போதும் தண்ணீர் அருந்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியர்கள் மேற்பார்வையிட அந்தந்த வகுப்புக்கு சென்று மாணவர்களை தண்ணீர் அருந்த செய்கின்றனர். மேலும் உணவு இடைவேளைக்கு முன்பாக "தண்ணீர் பெல்" அடிக்கப்படுகிறது.

தண்ணீர் பெல் அடித்தால், அப்போது அனைத்து வகுப்பில் இருக்கும் மாணவர்களும் தண்ணீர் அருந்த வேண்டும் இதற்காக தலைமை ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் தினமும் தண்ணீர் பாட்டிலை கொடுத்து அனுப்ப சொல்லிவிடுகிறார். அதன்படி மாணவர்களும் தண்ணீர் பாட்டிலை கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் சொல்வது படியே இடைவேளையின் போது உற்சாகமாக தண்ணீர் அருந்துகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு எந்த விதமான உடல் உபாதைகளும் இன்றி பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக இருக்கின்றனர். மேலும் பள்ளி நேரத்தின்போது 2 லிட்டர் அளவிற்கு தண்ணீரை மாணவர்கள் அருந்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலேயே முதன் முறையாக கருங்குளத்தில் உள்ள அரசு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அற்புத திட்டம் வரும் காலங்களில் மற்ற பள்ளிகளிலும் கொண்டு வந்தால் சீரும் சிறப்புமாக இருக்கும் என பெற்றோர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்