புது நண்பர்களின் அறிமுகம் வேண்டுமா..? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ..! 

புது நண்பர்கள் உங்களுக்கு கிடைக்கும் போது முதலில் அவர்களது விருப்பத்திற்கு தலை அசையுங்கள்.. எடுத்த உடனே, அவர்களுடைய கருத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து பேசினீர்கள் என்றால் அவ்ளோதான்.. அப்படியே  நீங்கள் கிளம்பி வர வேண்டியது தான்.

குறிப்பிட்ட நேரத்தில் இப்படி ஒரு பிரிண்ட்ஷிப் கிடைத்ததற்கு  நான் மிகவும் லக்கியாக பீல் பண்றேன் என தெரியப்படுத்தவும்.

முதல் சந்திப்பிலேயே உங்களின் முக்கியமான விஷயங்கள்  அனைத்தையும் போட்டு உடைத்து விடாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் தனி  விருப்பதை கொண்டு உள்ளனர் என்பதை எப்போதும்  மனதில் கொண்டு அதற்கேற்றவாறு நடந்துக்கொள்வது நல்லது.

நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர்களும் அதே போன்று நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என நினைக்க கூடாது. அதாவது  உங்கள் நம்பிக்கைக்கு அவர்களை வற்புறுத்தக் கூடாது.

நீங்கள் ஒரு நம்பிக்கையான  மனிதர் என்பதை உணர்த்துங்கள். அதே சமயத்தில் மற்றவர்கள் பற்றி புறம் பேசுவதையும், நக்கல் செய்வதையும் தவிருங்கள்.

நீங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாவிற்கு அவர்களையும் அழையுங்கள்.

புது புது விஷயங்களுக்கும், புது புது நண்பர்கள் மீதும் உங்களுடைய  ஆர்வத்தை காண்பிக்கலாம். ஆனால் அது கொஞ்சம் லிமிட்டை  தாண்டாமல் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களை போன்றே, யாரெல்லாம் புது நண்பர்களை பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை கவனித்து அவர்களுடன் நீங்ககள் பேசலாம்.

புதியதாக  ஒருவரிடம் பேசும் போது அவர்களின் விருப்பு வெறுப்பு இவை இரண்டையும் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பேசும் போது உங்கள் உறவு மீண்டும் வலுப்பெறும்.